ஜெப ஊழியம்

ஜெப ஊழியம் உருவாதல்:

தந்தையவர்களின் நற்செய்தி ஊழியத்தால் மீட்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற, அனேகருடைய ஆவிக்குரிய வாழ்வை, வழிநடத்தும் பொருட்டு, 1986 - ம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 - ம் நாள், மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவில், அவர் ஒரு "ஜெப ஊழியத்தை", ஆரம்பித்தார்.

1987, ஜனுவரி 1 - ம் நாள் முதல், அங்கே, உபவாசக் கூட்டங்கள், குணமளிக்கும் ஆராதனைகள், மீட்பின் தியானங்கள், போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வந்தார். இதனால், பல்லாயிரம் மக்கள் மீட்படைந்து, விடுதலையைப் பெற்றுக் கொண்டார்கள்.

அந்த இடத்தில், மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், பணிகள் விரிவடைந்ததாலும், மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில், வசதியான ஓர் இடத்தை வாங்கி, அங்கே தன் மீட்பின் பணியை முழு வீச்சில் ஆரம்பித்தார்.