உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
உலகமும் - உத்தரிக்கும் ஸ்தலமும்
         “உத்தரிக்கும் ஸ்தலம்” என்பது, பாவப்பரிகாரம் செய்கின்ற இடம்.

         இந்த உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு, இவ்வுலகில் வாழும்போது, பாவப்பரிகாரம் செய்யாதவர்கள் மட்டுமே, செல்கின்றனர்.

         ஆனால், உலகில் வாழும்போதே, பாவப்பரிகாரம் செய்து முடித்தவர்கள், நேராக, விண்ணக பாக்கியத்தை அடைகின்றனர்.

         உலகமே உத்தரிக்கும் ஸ்தலம் ஆவது எவ்வாறு?

   •    இம்மையில் மனிதன் பாவ சார்புடையவன்


   •    அன்றாடம், அவன் தன் பாவத்திற்காக, பரிகாரம் செய்ய வேண்டும்.


   •    “உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான்” என்பது, உலகப் பழமொழி.


   •    அதுபோலவே, “பாவம் செய்தவன், பரிகாரம் செய்துத்தான் ஆக வேண்டும்”.


   •    அன்றாட சிலுவையை, நாள்தோறும் சுமந்து, இயேசுவுக்குப் பின்னால் சென்று, அவன் பரிகாரம் செய்கிறான்.


   •    இதனால், அவன் பாவ விடுதலை அடைகிறான் - 1பேது 4:1.


   •    இவ்வாறு, அன்றன்றுள்ள பாவங்களுக்காய், அன்றன்றுள்ள சிலுவையை, மகிழ்ச்சியோடு தூக்கி சுமக்கின்ற மனிதனுக்கு, “இக வாழ்வே, உத்தரிக்கும் வாழ்வாக” மாறுகிறது – மத் 16 :24 , 6 :34 , மாற் 10 :30.


   •    இகத்தின் வாழ்வை, உத்தரிக்கும் ஸ்தலமாக மாற்றிக்கொண்ட ஒருவருக்கு, பரத்தில் உத்தரிக்கும் ஸ்தலம் தேவையற்றது.


      உதாரணங்கள்

   உலகத்தையே உத்தரிக்கும் ஸ்தலமாகக் கொண்டவர்கள்
   ஏழு பிள்ளைகளும் தாயும்
   •    இவர்கள், கடவுளின் கட்டளையைக் கடைபிடித்ததற்காக, தங்களுக்கு வந்த பாடுகளை (துன்பங்களை), பாவப்பரிகாரமாக ஏற்றனர் - 2மக் 7 :18.


   •    எனவே, அவர்கள் விண்ணக வீட்டை, சென்றடைந்தனர் - 2மக் 7 :9.


   •    அவர்களுக்கு, இவ்வுலகமே உத்தரிக்கும் ஸ்தலமாக அமைந்தது - 2மக் 7 :7-10.

   2. நல்ல கள்ளன்
  •    இயேசுவோடு, சிலுவையில் தொங்கி நின்ற இரு கள்வர்களில், ஒருவன் பாவப்பரிகாரத்தைச் சிலுவையிலேயே செய்தான் - லூக் 23 :41.


   •    நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம் - லூக் 23 :41.


   •    உலகத்தையே உத்தரிக்கும் ஸ்தலமாக ஏற்றுக்கொண்ட அவனுக்கு, வான்வீடு காத்திருந்தது - லூக் 23 :43.


   •    “நீர் இன்று, என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என, உறுதியாக உமக்கு சொல்கிறேன்” - லூக் 23 :43.

   3. ஏழை இலாசர்
   •    இலாசர், பணக்காரனின் வீட்டு வாயிலின் முன், உண்ண உணவின்றி, உடையின்றி, வறுமை, நோய், துன்பத்தால், மிகவும் கஷ்டங்களை அனுபவித்தான்.


   •    இவ்வுலகில் வாழும்போதே, உத்தரிக்கும் ஸ்தலத்தை அனுபவித்த அவர், இறந்த பின், ஆபிரகாமின் மடியில் அமரும், பாக்கியம் பெற்றார் - லூக் 16 :20-22.


  மறு உலகில் உத்தரிக்கும் ஸ்தலம்
  பணக்காரன்
   •    அவன், இவ்வுலக வாழ்வில், தினமும் விருந்துண்டு, இன்புற்றிருந்தான் - லூக் 16:19.


   •    இவ்வுலகில், அவன் பாவம் செய்தானேயொழிய, பாவப்பரிகாரம் செய்யவில்லை.


   •    எனவே, அவன் பாதாளத்தில் வதைக்கப்பட்டான் - லூக் 16 :23.


   •    பாதாளத்தில், அவன் மனம்திரும்பி, மீட்படைய, கடவுள் உத்தரிக்கும் ஸ்தல வாய்ப்பைக் கொடுத்தார்.