உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
உலகத்தின் தண்டனையும் - கடவுளின் தண்டனையும்
உலக நீதி
        மனிதன், இயல்பிலேயே இயலாதவனும், குறையுள்ளவனும், பெலவீனனுமாயிருக்கிறான் - உரோ 7 :24.

        ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும், தண்டனை என்பதும் உண்டு.

        தண்டனை, திருத்துவதற்காகவே என்று, வேதம் கூறுகிறது - எபி 12 :7-10.

        மனிதன் திருந்த, அவன் வாழ்நாள் முழுவதும், இடம் தர வேண்டும்.

        தண்டனை, குற்றத்தின்மட்டில், பயம் உண்டாவதற்கும், பிறருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்குமேயொழிய, பழி தீர்ப்பதற்கல்ல.

        எனவே, சமுதாயத்தில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து, பரவலாக உள்ளது.

        மனிதன், தான் செய்யும் செயல்களின் விளைவுகளை, “முழுமையாக அறிந்து”, புரிந்து, கிரஹிக்கும் தன்மை கொண்டவன் அல்ல. எனவே, அவன் செய்யும் பல பாவங்கள், “அறியாமல்” செய்வதே.

  உதாரணமாக

  தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை இயேசு, “இவர்கள் “அறியாமல்” செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” - லூக் 23 :34, என்றார்.

கடவுளின் நீதியும் – தண்டனையும்
        கடவுள் நீதியுள்ளவர். ஏனெனில், அவர் இரக்கமும் மன்னிப்பும் உடையவர் – எசா 30 :18.

        நீ நம்மிடம் திரும்பி வந்தால், உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வேன்; - சீரா 17:29.

        ஏழு எழுபது முறை, சகோதரனை மன்னிக்க வேண்டும் என்று, மனித குலத்திற்கு கற்றுக்கொடுத்தவர் இயேசு – மத் 18 :22.

        தன் மகன் எப்போது வருவான் என்று, காத்திருக்கும் தந்தை, நம் கடவுள் - லூக் 15:20.

        கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை அழிக்க அல்ல - தி.பா 118 :18 , எசே 33:11.

        கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை திருத்தி மீட்டெடுக்க - நீமொ 3 :11-12.

        கடவுள், “தகப்பன் தன் பிள்ளையை தண்டித்து திருத்துவது போல” நம்மை தண்டித்து திருத்துகிறார் - எபி 12 :7-10.

        எனவே, நரகத் தண்டனை - மத் 23 :33, மனிதனை திருத்தி மீட்கவே -1கொரி 3 :13-15.

        பாதாளத்தினின்று, நம்மை விடுவிக்கும் பேரன்பு கடவுளுடையது - தி.பா 86 :13.

        இவ்வாறு, கடவுளின் நீதியையும், அவர் அளிக்கும் தண்டனையையும், நாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது, தண்டனை மனிதனை மீட்பதற்காகவே, தரப்படுகிறது.

கடவுளின் தன்மையும் – விருப்பமும்
கடவுளின் தன்மை
        “நொடிப்பொழுதே கோபம்” கொண்டு, என் முகத்தை திருப்பிக் கொண்டேன். “என்றுமுள்ள பேரன்பால்” உங்களை மீண்டும் அணைத்துக் கொள்வேன் - எசா 54 :7.

         கடவுளின் கோபம் - ஒரு நொடிப்பொழுது.

         கடவுளின் இரக்கம் - என்றுமுள்ளது.

         கடவுளின் கோபத்திற்கு - எல்லையுண்டு.

         கடவுளின் இரக்கத்திற்கு - எல்லையில்லை.

         முடிவில்லாத அன்பினால், உன்மேல் அன்பு வைத்தேன் - எரே 31 :3.

         பேரன்பும், இரக்கமும் கொண்டவர் கடவுள் - தி.பா 69 :16.

  கடவுளின் விருப்பம்
         உண்மையில், பொல்லாரின் “சாவையா நான் விருமபுகிறேன்”, அவர்கள், தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ, என் விருப்பம், - எசே 18 :23.

         நீங்கள் ஏன் சாக வேண்டும்? எவருடைய சாவிலும், நான் இன்பம் காண்பதில்லை - எசே 18 :32.

         எல்லா மனிதரும் மீட்பு பெறவும், உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென, கடவுள் விரும்புகிறார் - 1திமோ 2 :4.

         என்னிடம் ஒப்படைக்கும் எவரையும், நான் அழிய விடாமல், இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே, என்னை அனுப்பியவரின் விருப்பம் - யோவா 6 :39.

          ஒரு அறிவுள்ள மனிதன், அல்லது ஜீவி, தான் “அடைய முடியாத” ஒன்றை “விரும்பமாட்டார்”.

          அவ்வாறிருக்க, ஞானத்தின் உறைவிடமாகிய கடவுள், ஒன்றை விரும்புகிறார் என்றால், அவர் அதை அடைய ஏதேனும் ஒரு வழியையும் வைத்திருப்பார்.

          அந்த வழி தான், “உத்தரிக்கும் ஸ்தலம்”.

          உத்தரிக்கும் ஸ்தலத்தில் சென்று, எல்லா மனிதரும், மீட்கப்படுகின்றனர்.

          அவ்வாறு, கடவுளின் விருப்பம் நிறைவேறுகின்றது.