உத்தரிக்கும் ஸ்தலம்
"PURGATORY"
நரகம், நெருப்பு, துன்பம்
நரகமும் - நெருப்பும்
         நரகத்தில், அவியா நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டேயிருப்பதால், அதை எரிநரகம் என்றே, வேதம் கூறுகிறது.

         சகோதரனை அறிவிலியே என்பவன், “எரிநரகத்துக்கு” உள்ளாவான் - மத் 5 :22 ,18 :9.

         எனவே, நெருப்பும் நரகமும் ஒன்றே.

நெருப்பும் துன்பமும்
         “துன்பத்தீயில்”, நீங்கள் சோதிக்கப்படும்போது, மலைத்துப் போகாதீர்கள் - 1பேது 4 :12.

         துன்பம் என்னும் உலை வழியாய், உன்னைத் தேர்ந்தெடுத்தேன் - எசா 48 :10. கடவுள், நெருப்பை அல்லது, துன்பத்தை பயன்படுத்துவது, பாவ மனிதனை சுத்தமாக்கி மீட்டெடுக்க.

         அழியக்கூடிய பொன்னை நெருப்பில் புடமிடுவது போல, உன் விசுவாசம் புடமிடப்படுகிறது – 1பேது 1:6 ,7; தானி 12 :2-10.

         பொன், வெள்ளியைப்போல, மெசியா புடமிடுவார் - மலா3 :2-3.

         இவ்வாறு, “நெருப்பு”, “நரகம்”, “துன்பம்”, ஆகிய மூன்றும், ஒரே கருத்தில் வேதத்தில் கூறப்படும் வார்த்தைகள். இவற்றின் இறுதி நோக்கம் “மீட்பே” ஆகும்.

நித்திய நரகம் (தண்டனை)

    புதிய ஏற்பாடு கூறும், நித்திய தண்டனைக்கு பொருள் என்ன?

         “நித்திய” என்ற வார்த்தையை, “அற்பமான மனிதனுக்கு” ஒப்பிடலாமா?.

         ஏனெனில், மனிதன் பெலவீனனும், குறையுள்ளவனுமாவான் - உரோ 7 :24.

      •    பொதுவாக, ஒரு “செயல்” இருந்தால், அதற்கொரு “எதிர்ச்செயல்” அல்லது, பின்விளைவு உண்டு.


      •    உதாரணமாக, திருவள்ளுவர் கூறுவார் “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்”


      •    அதுபோலவே, “பாவமும் - தண்டனையும்”. “பாவம்” என்று ஒன்று வந்துவிட்டால், அதன் கூடவே, “தண்டனையும்” பின்தொடர்கிறது.


      •    எனவே, பாவம் உள்ளவரையில், தண்டனையும் “நித்தியமானது”.


      •    ஆனால், ஒரு பாவம் செய்தவர், அந்த ஒரே பாவத்திற்கான தண்டனையை, நித்தியமாக பெற முடியாது.


      •    மேலும், கடவுள் மனிதனுக்கு அளிக்கும், தண்டனையின் நோக்கம், “மீட்பு” என்றால், மனிதன் நித்தியத்திற்கும், தண்டனை பெற முடியாது - எபி 12 :10 , மலா 3 :2.


        •    மேற்குறிப்பிட்ட கருத்துக்களின் அடிப்படையில், செய்யக்கருதிய தீங்கைக் குறித்து, மனம் மாறுகின்ற கடவுள் - யோனா 3 :10, தம் பிள்ளைகளை, பாவத்திலேயே அழிந்து போக விடமாட்டார். இதிலிருந்து, “உத்தரிக்கும் ஸ்தலம்” அல்லது, “பாவப்பரிகாரம் செய்யும் இடம்” என்ற ஒரு வாய்ப்பையும், கடவுள் மனிதனுக்கு வைத்துள்ளார் என்பது, நமக்கு மிகவும் தெளிவாக விளங்கும்.


    உலகத்தின் தண்டனையும் - கடவுளின் தண்டனையும்

      உலக நீதி

           மனிதன், இயல்பிலேயே இயலாதவனும், குறையுள்ளவனும், பெலவீனனுமாயிருக்கிறான் - உரோ 7 :24.

        • ஆனால், மனிதன் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும், தண்டனை என்பதும் உண்டு.

           தண்டனை, திருத்துவதற்காகவே என்று, வேதம் கூறுகிறது - எபி 12 :7-10.

        •    மனிதன் திருந்த, அவன் வாழ்நாள் முழுவதும், இடம் தர வேண்டும்.


        •    தண்டனை, குற்றத்தின்மட்டில், பயம் உண்டாவதற்கும், பிறருக்கு எச்சரிக்கையாக இருப்பதற்குமேயொழிய, பழி தீர்ப்பதற்கல்ல.


        •    எனவே, சமுதாயத்தில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து, பரவலாக உள்ளது.


        •    மனிதன், தான் செய்யும் செயல்களின் விளைவுகளை, “முழுமையாக அறிந்து”, புரிந்து, கிரஹிக்கும் தன்மை கொண்டவன் அல்ல. எனவே, அவன் செய்யும் பல பாவங்கள், “அறியாமல்” செய்வதே.


          •    உதாரணமாக:
               தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை இயேசு, “இவர்கள் “அறியாமல்” செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” - லூக் 23 :34, என்றார்.

       

      கடவுளின் நீதியும் – தண்டனையும்

           கடவுள் நீதியுள்ளவர். ஏனெனில், அவர் இரக்கமும் மன்னிப்பும் உடையவர் – எசா 30 :18.

           நீ நம்மிடம் திரும்பி வந்தால், உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வேன்; - சீரா 17:29.

           ஏழு எழுபது முறை, சகோதரனை மன்னிக்க வேண்டும் என்று, மனித குலத்திற்கு கற்றுக்கொடுத்தவர் இயேசு – மத் 18 :22.

           தன் மகன் எப்போது வருவான் என்று, காத்திருக்கும் தந்தை, நம் கடவுள் - லூக் 15:20.

           இவ்வாறு, நீதியுள்ள கடவுள் (இரக்கமும் மன்னிப்பும்), தன் பிள்ளைகள் அழிந்து போக, நித்தியமாக தணடிக்க மாட்டார்.

           கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை அழிக்க அல்ல - தி.பா 118 :18 , எசே 33:11.

           கடவுள், மனிதனை தண்டிப்பது, அவனை திருத்தி மீட்டெடுக்க - நீமொ 3 :11-12.

           எனவே, நரகத் தண்டனை - மத் 23 :33, மனிதனை திருத்தி மீட்கவே -1கொரி 3 :13-15.

           பாதாளத்தினின்று, நம்மை விடுவிக்கும் பேரன்பு கடவுளுடையது - தி.பா 86 :13.

           இவ்வாறு, கடவுளின் நீதியையும், அவர் அளிக்கும் தண்டனையையும், நாம் கணக்கிட்டுப் பார்க்கும் போது, தண்டனை மனிதனை மீட்பதற்காகவே, தரப்படுகிறது.

          உதாரணமாக:
             தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை இயேசு, “இவர்கள் “அறியாமல்” செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” - லூக் 23 :34, என்றார்.