#


இயேசுவின் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்

"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்"

"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்"

தியானம் :

இயேசு தாமே சுமக்கும்படி, இயேசுவின் மேல் பார சிலுவையை சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம் அவர் தோள்மேல் சுமத்தப்படுகின்றன.

சிந்தனை:

இயேசுவே, என் கடமைகளை நான் செய்யும் போது,

அனேகர் மேல், அவர்கள் சுமக்க முடியாத பாரங்களை நான் சுமத்தி இருக்கிறேன்.

என் பிள்ளைகள், என் பெற்றோர், என் சொந்த பெந்தங்களில், தாங்க முடியாத, அவர்கள் தூக்கி சுமக்க முடியாத சுமைகளை நான் அவர்கள் மேல் வைத்து, நான் பாவம் செய்தேன்.

இயேசுவே, பிறருடைய பாவங்களையும், பாரங்களையும் நானும் சுமக்க எனக்கு கற்றுத் தந்தீர்.

ஆனால் நான், பிறருடைய சின்ன சின்ன குற்றங்களை கூட பொறுக்க முடியாமல், பலமுறை முணுமுணுத்திருக்கிறேன்.

இயேசுவே, என் மீறல்களை எல்லாம் உம் தோளிலே நீர் சுமந்தீர்.

என் பாவங்களையும், பெலவீனங்களையும் நீர் சுமந்தீர்.

இதோ, என்னை சூழ்ந்திருக்கிற மக்களின் பாடுகளை நான் ஏற்றுக்கொள்ள, நல்ல தீர்மானத்தோடு நான் உம் பின்னே வருகிறேன்.

இயேசுவே! பிறருடைய குற்றங்குறைகளை, சகித்து, பொறுத்து வாழ இந்த பரிசுத்த வேளையில் நான் தீர்மானிக்கிறேன்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)

மரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு