இயேசுவின் வாழ்வில்: (மத் 26:36-44)

இயேசுவின் வாழ்வில்: (மத் 26:36-44)

 •   கெத்சமெனியில் “இயேசுவின் மனத்தில்” துயரமும் கலக்கமும் பற்றிக்கொள்கிறது – மத் 26:37-38.
 •   அவ்வேளையில், “உடலின் விருப்பம்” இயேசுவை மேற்கொள்ளப் பார்க்கிறது.
 •   “இத்துன்பக்கலம், என்னை விட்டு அகலட்டும்” – மத் 26:39.
 •   “உடல்” எப்போதும் துன்பத்தை தவிர்த்து, சுகத்தையே ஆசிக்கும்.
 •   எனவே “துன்பத்தின்” மத்தியில், உடல் தன் விருப்பத்தை இயேசுவுடைய “சுயத்தினுள்” திணிக்கிறது.
 •   ஆனால், “இயேசுவின் சுய விருப்பம்”, “கடவுளின் விருப்பத்தின்” மட்டில், “சாய்ந்திருக்கிறது”.
 •   ஆனாலும், “என் விருப்பத்தின்படி” அல்ல, “உம் விருப்பப்படியே” ஆகட்டும் - மத் 26:39,42,44, என்று இயேசு கூறுகிறார்.
 •   மூன்று முறை, “உடலின் விருப்பம்” நெருக்குகிறது. அந்த மூன்று முறையும், “இறைவிருப்பத்துக்கு” இயேசு தன்னை ஒப்புக் கொடுத்தார்.
 • சீடரின் நிலை:
 •   ஆனால், சீடர்களோ, “உடலின் விருப்பத்துக்கு” அடிமையாகி உறங்கிக்கொண்டிருந்தனர் - மத் 26:40,43,45.
 •   இங்கே சீடர்கள் என்பது, நாம் அனைவருமே.
 • ஏதேன் தோட்டமும் - கெத்சமெனித் தோட்டமும்:
 •   ஏதேன் தோட்டத்தில், “உலக , மாமிச, பிசாசின் விருப்பத்துக்கு” ஆதிப்பெற்றோரின் “சுய விருப்பம்” அடிமையானது – தொ.நூ 3:1-6.
 •   ஆனால், கெத்சமெனித் தோட்டத்தில், “உடலின் விருப்பத்தை” , “கடவுளின் விருப்பத்தால்” இயேசுவின் “சுயவிருப்பம்” மேற்கொண்டது.
 •   இவ்வாறு, ஆதிப்பெற்றோர், “உலக, மாமிச, பிசாசின் விருப்பத்துக்கு” அடிமையானதன் விளைவை, இயேசு பரிகரித்தார்.
 • சாய்வு எந்தப் பக்கம்:
 •   மரம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கிறதோ, அந்தப் பக்கம் தான் விழும்.
 •   “மனித சுயம்” உலகம், பிசாசு, சரீரத்தின் விருப்பங்களின் பக்கம் சாய்ந்திருந்தால், நெருக்கடி வேளையில், “சுயம்” அவற்றின் பக்கம் தான் விழும்.
 •   “மனிதசுயம்” கடவுளின் விருப்பங்கள் பக்கம் சாய்ந்திருந்தால், நெருக்கடி வேளையில், அது கடவுள் பக்கமே விழும்.
 • ஆவிக்குரிய ஆதிப்பெற்றோரும் - நோன்பும்:
 •   ஆதிப்பெற்றோர் ஆவிக்குரியவர்கள் - தொ.நூ 2:7.
 •   அவர்களுடைய “சுய விருப்பம்”, தன்னடக்கம், கட்டுப்பாட்டை கடைபிடித்தது வரையிலும், “சுயத்தின்” சாய்வு, கடவுளுடைய விருப்பத்தின் பக்கமே இருந்தது.
 •   உலகம், பிசாசு, சரீர, விருப்பங்களின் மட்டில், தன்னடக்கம், கட்டுப்பாடு எனும் “நோன்பை”, அவர்கள் கடைபிடிக்கத் தவறிய போது, அவர்கள்
 •   “சுயம்” உலகம், பிசாசு, சரீர விருப்பங்களின் பக்கம் சாய்ந்தது.
 •   கடவுள் கூறியபடியே, சாவுக்கு ஏதுவான துன்பங்கள் அவர்களைத் தொடர்ந்தன – தொ.நூ 3:14-19.
 • பவுலும் நோன்பும்:
 •   பவுலுக்கும் போராட்டம் இருந்தது – உரோ 7 : 14 -25
 •   ஆனால் போராட்டத்தில் அவரது “சுயம்” தன்னடக்கம் கட்டுப்பாடு என்னும் நோன்பைக் கடைபிடித்ததால்”, அது, கடவுளின் விருப்பத்தின் பக்கம் சாய்ந்தது – 1 கொரி 9 : 25, 27.
 •   இதனால் அவர் “இரட்சிப்பு – அபிஷேகத்தில்” நிலைத்து வாழ முடிந்தது - உரோ 7 : 25.
 • இயேசுவும் நோன்பும்:
 •   கெத்சமெனியில் இயேசுவின் போராட்டத்திலும் - மத் 26 : 39-44, உலக, மாமிச விருப்பங்கள் அவரை நெருக்கிய போதும், அவர் “கடவுளின் விருப்பம்” பக்கமே சாய்ந்தார்.
 •   வனாந்தரத்தில் அவர் தொடங்கிய “நோன்பு வாழ்வு” அவருக்கு கல்வாரி வரையிலும் துணை செய்தது.
 • நோன்பு காலமும் - நோன்பு வாழ்வும்:
 •   ஆண்டுக்கு ஒருமுறை நாற்பது நாட்கள் நோன்பு என்பது, ஆவிக்குரிய மக்களுக்கு எந்தவிதத்தில் அமைகிறது என்று பார்ப்போம்.
 •   இது வாகனம் ஒன்றை ஒர்க்ஷாப்பில் விடுவது போல.
 •   ஆண்டுக்கு ஒரு முறை பழுதுபார்த்து சர்வீஸிங் செய்து பழையன களைந்து, புதியன பொருத்தி, வாகனத்தை “தகுதிப்படுத்துதல்” அங்கே நடைபெறும்.
 •   அது, சரியாக்கப்பட்டதும், தகுதிச்சான்றிதழ் பெற்று, எஞ்சிய நாட்கள் முழுவதும் நலமாக ஒடும்.
 •   அவ்வாறே, ஆவிக்குரிய பிள்ளைகள், தங்களுடைய “நோன்பு வாழ்வை” அலசிப்பார்த்து, குறைகளைக் களைந்து நிறைகளை வளர்க்க, “நோன்பு காலம்” அமைகிறது.
 •   நோன்புகாலத்தில் நாம் நிறைகுறை ஆராய்ந்து மீண்டும் நம்முடைய நோன்புவாழ்வை நேர்த்தியாகவும், மிடுக்காகவும் தொடர, பயிற்சிகளும், வழிநடத்தல்களும் தரப்படுகின்றன.
 •   “நோன்பு காலம், நோன்பிருக்கும் காலம்”; மற்றகாலங்கள் “எப்படியும் வாழும் காலம்” என்பது, ஆவிக்குரிய கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது.
 •   ஆனால் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் நோன்பு காலத்தில் “வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி” எசா 38: 1-3, குற்றங்குறைகளுக்காக ஆண்டவரிடம் பொறுத்தல் கேட்டு மீண்டும் முழு நிறைவோடு ஒரு “நோன்பு வாழ்வை”, நோன்பு காலத்துக்கு பின் தொடர வேண்டும்.

இயேசுவின் வாழ்வில்: (மத் 26:36-44)