பவுலின் வாழ்வில்: (உரோ 7:14-25)

பவுலின் வாழ்வில்: (உரோ 7:14-25)

 • சுயவிருப்பம்:
 •    “எதை செய்ய விரும்புகிறேனோ” – உரோ 7:15.
 •   “நான் விரும்பாததை” செய்கிறேன் - உரோ 7:16.
 •   “நான் விரும்பும்” நன்மையை – உரோ 7:19.
 •   “என் மனம் ஏற்றுக்கொள்ளும்” சட்டம் - உரோ 7:23.
 • கடவுளின் விருப்பம் (சட்டம்):
 •   “சட்டம்” நல்லது என, ஏற்றுக்கொள்கிறேன் - உரோ 7:16.
 •   “கடவுளின் சட்டத்தைக் குறித்து” உளமார மகிழ்கிறேன் - உரோ 7:22.
 •   “கடவுளின் சட்டத்துக்கு” கட்டுப்பட்டிருக்கும் நானே – உரோ 7:25.
 • வேறு விருப்பங்கள் :
 •   “நான் விரும்பாததை” செய்கிறேன் - உரோ 7:20.
 •   என்னுள் “குடிகொண்டிருக்கும் பாவம்” அதை செய்கிறது – உரோ 7:20.
 •   “என் உறுப்பில்” வேறு ஒரு “சட்டம் (விருப்பம்)” உள்ளது – உரோ 7:23.
 •   “என் உறுப்புக்களில், இருக்கும் “பாவச்சட்டம்” என்னைக் “கட்டுப்படுத்துகிறது” – உரோ 7:23.
 •   நான் “ஊனியல்பினன்” – உரோ 7:14.
 •   “என் மனத்தால் (சுய விருப்பம்)” “கடவுளின் சட்டத்துக்கு (கடவுளின் விருப்பம்)” கட்டுப்பட்டிருக்கும் நானே, “ஊனியல்பின் பாவ சட்டத்துக்கு (சரீர விருப்பம்)” கட்டுப்படுகிறேன் - உரோ 7:25.
 • போராட்ட வாழ்வு:
 •   இங்கே ஒரு போராட்ட வாழ்வைக் காண்கிறோம்.
 •   சுயவிருப்பம், கடவுளின் விருப்பத்திற்கும், வேறு விருப்பங்களுக்கும் இடையே, போராடிக் கொண்டிருக்கிறது.
 •   பரிசுத்தவானாகிய (கடவுளின் விருப்பத்துக்கு கட்டுப்பட்ட) பவுலுக்கே இந்த போராட்டம் இருந்ததென்றால், சாதாரண மனிதர் நிலை என்ன? என்பதை எண்ணிப்பார்ப்போம்.
 • நோன்பும், இரட்சிப்பு அபிஷேகமும்:
 •   இந்தப் போராட்டத்தில், வெற்றிக்கொள்ள, பவுல் முதலில், “தன்னடக்கம் கட்டுப்பாடு, என்ற நோன்பை கைக்கொள்கிறார் - 1கொரி 9:25,27.
 •   இரண்டாவது, அவர் தான் பெற்ற “இரட்சிப்பு அபிஷேகத்தை” நினைவு கூருகிறார் - உரோ 7:25.
 •   “தன்னடக்கம் கட்டுப்பாடு” எனும், நோன்பு வாழ்வை கைககொண்ட ஒருவர், தம்முடைய “இரட்சிப்பால், அபிஷேகத்தால்” “வேறு விருப்பங்களை” மேற்கொண்டு, “கடவுளின் விருப்பத்துக்கு அடிமையாகி” – லூக் 1:38, வாழ முடியும் என்பது, பவுலின் அசைக்க முடியாத படிப்பினை.

பவுலின் வாழ்வில்: (உரோ 7:14-25)