ஏதேன் தோட்டத்தின் நிகழ்ச்சி

ஏதேன் தோட்டத்தின் நிகழ்ச்சி

 •   கடவுள், “தன் சாயலாக” மனிதனைப் படைத்தார் - தொ.நூ 1:26,27.
 •   இந்த மனித படைப்பு, முழுமை அடைந்தது, தொ.நூ 2:16,17 வசனங்களில். தொ.நூ 2:16 –ல் “உன் விருப்பம் போல் உண்ணலாம்” என்று, கடவுள் கூறினார்.
 •   இது, “சுய மனிதனின், சுய விருப்பம்”.
 •   இந்த சுயவிருப்பத்தில் வேறு விருப்பங்கள் நுழையும் போது, அவன் “சுயத்தை” இழந்து, மிருக, உலக, பேயின் நிலைக்கு தள்ளப்படுகிறான்.
 •   இதற்காகவே கடவுள், “தன் சாயலை” மனிதனுக்குள் பதிக்க, தொ.நூ 2:17–ம் வசனத்தைத் தந்தார்.
 •   அதாவது, “இதை உண்ணாதே” என்ற “தன் விருப்பத்தை” மனிதனுக்குத் தந்தார் - தொ.நூ 2:17.
 •   மனிதன், இந்த “கடவுளின் விருப்பத்தை” தன் “சுயவிருப்பத்தில்” வைத்து, வாழ்ந்த போது, அவன், “கடவுளின் சாயலில்” இருந்தான்.
 •   அதாவது, “கடவுள் மனிதனாக” இருந்தான்.
 • கட்டுப்பட்ட சுதந்திரம் - சீரா 15:14,15
 •   கடவுள் மனிதனுக்குத் தந்த “சுயவிருப்பம்” , சுதந்திரமுடையது (Free will). ஆனால் அது கட்டுப்பாடற்ற “சுதந்திரம்” அல்ல.
 •   “ஒருகட்டுப்படான சுதந்திரத்தை” கடவுள் மனிதனுடைய “சுயவிருப்பத்தில” வைத்தார்.
 •   அது “கடவுளுடைய விருப்பத்துக்கு கட்டுபட்ட சுதந்திரம்” எனபதை தொ.நூ 2 : 6-17 ல் பார்க்கிறோம்.
 •   மனிதன் வேறு விருப்பங்களுக்கு அடிமையாகும் போது, தன் சுதந்திரத்தை இழந்து விடுகிறான்.
 •   அவனது “ஆளுமையை” வேறு விருப்பங்கள் வசப்படுத்திக் கொள்கின்றன.
 •   ஆனால், அவனது சுயவிருப்பம், கடவுளுடைய விருப்பங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் போது, அவன் சுயவிருப்பத்தை இழக்காத, “சுதந்திர மனிதனாக” வாழ்கிறான்.
 •   அதாவது, “கட்டுப்பட்ட சுதந்திர மனிதன்”.
 •   ஒன்று, சுதந்திரம் இழந்த “அடிமை மனிதன்”, மற்றொன்று, “கட்டுப்பட்ட – சுதந்திர மனிதன்”
 •   இதில் எது வேண்டுமோ, அதை மனிதன் தேர்ந்து கொள்ளலாம்.
 •   மனிதனை கடவுள் “சற்றுச்சிறியவனாக” படைத்ததன் பொருள் இதுவே. தி.பா 8:5.
 • கடவுள் சாயலை இழந்த மனிதன்:
 •   ஆனால், மனிதன் சில நாட்களில், தன் சுயவிருப்பத்தில், “கடவுளுடைய விருப்பத்தை” வைப்பதை விட்டுவிட்டு, சரீர, உலக, பேயின் விருப்பத்தை அங்கே வைத்தான் - தொ.நூ 3:1-6.
 •   இதனால், மனிதன், “கடவுள் மனிதன்” என்ற நிலையை இழந்து, “உலக, மாமிச, பேய் மனிதனாக” மாறினான்.
 • மனித பிறப்பும், “மூன்று வித” விருப்பங்களும்:
 •   மனிதன் இந்த உலகில் பிறக்கும் போதே, அவனில் “சுயவிருப்பம்” என்பது இருக்கும் என்று பார்த்தோம்.
 •   அதோடு, சரீர விருப்பம், உலக விருப்பம், பேயின் விருப்பம் கூட, “அவனைச் சுற்றியே” இருக்கும்.
 •   இந்த மூன்று விருப்பங்களும் அவனுக்குள் நுழைந்து, அவனை அடிமைப்படுத்த சாதா போராடிக்கொண்டிருக்கும். இதை கீழ்க்காணும் பகுதியில் பார்ப்போம்.

ஏதேன் தோட்டத்தின் நிகழ்ச்சி