மனிதனும் “சுயவிருப்பமும்

மனிதனும் “சுயவிருப்பமும்

 • கடவுள் மனிதனுக்கு, “சுயவிருப்பத்தை” தந்து, அவனை “மனிதனாகப்” படைத்தார்.
 •   மனிதன், மனிதனாகப் படைக்கப்பட்டது, அவனுக்கு “சுயவிருப்பத்தை” தந்ததால்.
 •   மிருகத்துக்கு “சுயவிருப்பம்” என்பது இல்லை.
 •   எனவே, மனிதனை, மிருக நிலையிலிருந்து, மனித நிலைக்கு, உயர்த்தியது, அவனது “சுயவிருப்பம் தான்”.
 •   இந்த சுயவிருப்பத்தை உடைய மனிதனுக்கு, அந்த சுய விருப்பத்தால் ஆபத்துக்களும் உண்டு.
 • சுய விருப்பமும் - மாற்று விருப்பங்களும்:
 •   மனிதனுடைய சுயவிருப்பத்துக்கு வெளியே, அவனைச்சுற்றி மூன்று விருப்பங்கள் உள்ளன.
 •   1. அவனது “சரீரத்தின்” விருப்பம், 2. அவனைச் சுற்றியிருக்கும், “உலகத்தின்” விருப்பம், 3. அவனை ஏமாற்ற காத்திருக்கும் “அலகையின்” விருப்பம்.
 •   இந்த மூன்று விருப்பங்களும், அவனுடைய சுயவிருப்பத்துக்குள் நுழைய வாய்ப்பு உண்டு.
 • சுய விருப்பமும் - அடிமை நிலையும்:
 •   மனிதனின் சுயவிருப்பம், வேறு விருப்பங்களுக்கு கட்டுப்படும் போது, அவன் அந்த விருப்பங்களுக்கே “அடிமையாகிறான்.”
 •   இவ்வாறு, தன் சுயவிருப்பத்தை இழந்து போகிறான்.
 •   மேலும், வேறு விருப்பங்களுக்கு அடிமையாகும் மனிதன், எந்த விருப்பத்துக்கு அடிமைப்பட்டானோ, “அதுவாக” மாறிவிடுகிறான்.
 • தெய்வ மனிதன் - சுயமனிதன் - வேறு மனிதன்:
 •   சுயமனிதன், சரீர விருப்பங்களுக்கு, அடிமையாகும் போது, அவன், “மிருக மனிதன்” ஆகிறான்.
 •   சுயமனிதன், உலக விருப்பங்களுக்கு அடிமையாகும் போது, அவன் “உலக மனிதன்” ஆகிறான்.
 •   சுயமனிதன், பேயின் விருப்பபங்களுக்கு, அடிமையாகும் போது, அவன் “பேய்மனிதன்” ஆகிறான்.
 •   இவ்வாறு, “கடவுளின் சாயலாக” படைக்கப்பட்ட மனிதன், தன் நிலையை இழந்துவிடுகிறான்.
 • கடவுளின் விருப்பமும் - கடவுளின் சாயலும்:
 •   அவ்வண்ணமே, சுயமனிதன், கடவுளுடைய விருப்பத்துக்கு அடிமையாகும் போது, அவன் “கடவுள் மனிதன்” ஆகிறான்.
 •   மனிதன் எப்போதும், தன் “சுய மனித நிலையை” இழந்துவிடக் கூடாது.
 •   தன் சுய மனித நிலையை “பாதுகாக்க”, அவன் “சுயத்தில்” கடவுளுடைய விருப்பங்கள் இருக்க வேண்டும்.
 •   அது ஒன்றே, அவனுடைய “மனித நிலைக்கு” பாதுகாப்பு.
 •   “சுய மனிதனுடைய சாயல்” கடவுளுடைய சாயலாக இருக்க வேண்டுமென்றால், அவன் “கடவுளுடைய விருப்பங்களை” “தன் சுயத்தில்” வைத்துக் கொள்ள வேண்டும்.

மனிதனும் “சுயவிருப்பமும்”