புதிய ஏற்பாட்டில் நோன்பு

புதிய ஏற்பாட்டில் நோன்பு

 •   புதிய ஏற்பாட்டின் காலத்தில், “உண்ணா நோன்பு” Asistos – என்ற கருத்து, வழக்கத்தில் இருந்தது.
 •   தொடக்கத்திலிருந்தே, யூதருடைய ஒப்புரவின் நோன்பு கடைபிடிக்கப்பட்டது – தி.தூ 27:9.
 •   சில பரிசேயர், வாரத்தில் இரண்டு நாள் நோன்பிருந்தனர் - லூக் 18:12.
 •   பக்தியுள்ளோர், அடிக்கடி நோன்பிருப்பர் - அன்னா – லூக் 2:37.
 •   இயேசு, தன் மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்குமுன், நாற்பது நாள், நோன்பிருந்தார் - மத் 4:1,2.
 •   இது, பழைய ஏற்பாட்டின், நாற்பது நாள் நோன்பின் நிறைவே – மோசே, எலியா – வி.ப 34:28, 1அர 19:8.
 • இயேசுவின் போதனை:
 •   தம் சீடர்கள், மனிதரின் பார்வைக்கு அல்ல, கடவுளின் பார்வைக்கு நோன்பிருக்க வேண்டும் - மத் 6:16-18.
 •   அதாவது, வெளித்தோற்ற நோன்பை அல்ல, அகமாற்ற நோன்பை, இயேசு வலியுறுத்துகின்றார்.
 •   தம் சீடர்கள், தன்னைப் பிரியும் போது, நோன்பிருக்க வேண்டும் - மத் 9:15.
 •   கடவுளை விட்டுப் பிரிந்தவர்கள், மீண்டும் திரும்பி வரவும், கடவுளோடிருப்பவர்கள், அவரை விட்டுப் பிரியாமலிருக்கவும், நோன்பிருக்க வேண்டும்.
 • ஆதிசபையில் நோன்பு:
 •   நோன்பிருந்து ஜெபிக்கும் போது, ஆவியானவர் ஆட்கொண்டார் - தி.தூ 13:2.
 •   நோன்பிருந்து வேண்டி, ஊழியரை அனுப்பினர் - தி.தூ 13:3.
 •   ஊழியத்தின் போது, நோன்பிருந்து வேண்டல், நடைமுறையில் இருந்தது – தி.தூ 14:23.
 • புதிய ஏற்பாட்டில் தன்னடக்கம் கட்டுப்பாடே நோன்பு:
 • பழைய ஏற்பாட்டில்
 •   பழைய ஏற்பாட்டிலும் தன்னடக்கம் கட்டுப்பாடு போதனை இருந்தது
 •   பந்தியில் உணவடக்கம் வேண்டும் - நீ.மொ 23:3.
 •   உணவில் சுவையடக்கம் வேண்டும் - நீ.மொ 25:16.
 •   நகரை அடக்குவதைவிட, தன்னை அடக்குபவரே மேலானவர் - நீ.மொ 16:32.
 • புதிய ஏற்பாட்டில்,
 •   பவுல், ஆளுநர் பெலிக்சுவிடம், தன்னடக்கம் பற்றி பேசினார் - தி.தூ 24:25.
 •   தன்னடக்கப் பயிற்சி வேண்டும் என்றும், இயேசுவிடமிருந்து பிரியாதிருக்க, தானே உடலைக் கட்டுப்படுத்துவதாகவும், பவுல் கூறினார் - 1கொரி 9:25,27.
 •   சபை உறுப்பினரும், ஊழியரும், கட்டுப்பாடு உடையவராயிருக்க வேண்டும் - தீத் 2:2.
 •   தன்னடக்கத்தை தேடுங்கள் என்று, ஆதிசபைக்கு பேதுரு கூறினார் - 2பேது 1:6.
 •   தூய ஆவியின் கனிகளில் ஒன்று, தன்னடக்கம் - கலா 5:23.
 • உலகம் - பிசாசு – சரீரத்தை, தன்மறுப்பு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொள்வது நோன்பு
 • 1. உலகம்:
 •   உறவுகள், உடமைகள், ஆசைகளைத் துறப்பது அல்லது இழப்பது.
 •   உறவுகள், உடமைகளைத் துறக்க வேண்டும் - மத் 19:29.
 •   தன்னலம் துறந்து, இயேசுவையே பின்செல்ல வேண்டும் - மத் 16:24.
 •   எதையும் இழக்காதவன், இயேசுவைப் பின்செல்ல முடியாது - லூக் 14: 26,27.
 •   ஆதி சீடர்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றனர் - மாற் 10:28.
 •   மத்தேயு, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்சென்றார் - லூக் 5:27,28.
 •   உடமையை எல்லாம் விடாதவர், இயேசுவின் சீடனாக முடியாது – லூக் 14:33.
 •   இழக்காதவர், இறை ஆட்சியில் நுழைய முடியாது - லூக் 18:29,30.
 •   இயேசுவுக்கு முன், பவுல், மற்ற அனைத்தையும் குப்பை எனக் கருதினார் - பிலி 3:8.
 •   உலகப் போக்கிலான, இச்சைகளை ஒழித்துவிடுங்கள் - கொலோ 3:5.
 • 2. பிசாசு:
 •   உங்களில் பாவம் ஆட்சி செலுத்த விடாதீர்கள் - உரோ 6:12.
 •   எதற்கும் அடிமையாகாதீர்கள் - 1கொரி 6:12.
 •   அலகை ஏமாற்றுவான், எச்சரிக்கை – 2தெச 2:9,10.
 •   அலகையின் கண்ணியைப் பற்றி எச்சரிக்கை – 1திமொ 3:7.
 •   பேயின் விருப்பப்படி வாழாமல் இருக்க எச்சரிக்கை – 2திமொ 2:26.
 •   அலகையை எதிர்த்து நில்லுங்கள் - யாக் 4:7.
 •   அவர்கள், மனிதனின் தீய நாட்டங்களுக்கு இசையவில்லை – 1பேது 4:2.
 • 3. சரீரம்:
 •   ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடுங்கள் - 1பேது 2:11.
 •   ஊனியல்பின் நாட்டங்களுக்கு, இடம் கொடுக்க வேண்டாம் - உரோ 13:14.
 •   உங்கள் உறுப்புகள், தேவ சித்தப்படி வாழ, இடறலாயிருந்தால், வெட்டி விடுங்கள் - மத் 5: 29,30.
 •   ஊனியல்பை, அதன் இயல்புணர்ச்சியோடு சிலுவையில் அறைந்து விடுங்கள் - கலா 5:24.
 •   நாவடக்கம், உடல் முழுவதையும், கட்டுப்படுத்துவதற்கு சமம் - யாக் 3:2.
 •   உடலின் தீச்செயல்களை, சாகடியுங்கள் - உரோ 8:13.
 •   உடலின் பாவ இயல்பு, சிலுவையில் அறையப்படட்டும் - உரோ 6:6.

புதிய ஏற்பாட்டில் நோன்பு