யூதித்தின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு (யூதி 8:4-6)

யூதித்தின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு (யூதி 8:4-6)

 • A. யூதித்தின் வாழ்வில் நோன்புக்கு மூன்று விதி:
 • 1. உலக மோகங்களை கட்டுப்படுத்தினார் - யூதி 8:4.
 •   “யூதித்து கைம்பெண் ஆனார். மூன்று ஆண்டு, நான்கு மாதமாய் தம் இல்லத்திலேயே இருந்தார்”
 • 2. உடலின் விருப்பங்களை அடக்கினார் - யூதி 8:5.
 •   “தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காக கூடாரம் ஒன்று அமைத்துக் கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்”.
 • 3. மனம் ஆசைப்படுவதைக் கட்டுப்டுத்தினார் - யூதி 8:6.
 •   “தம் கைம்மைக் காலத்தில், ஓய்வு நாளுக்கு முந்தின நாளும், ஓய்வுநாள் அன்றும், இஸ்ராயேல் இனத்தாருக்குரிய திருநாட்கள், மகிழ்ச்சியின் நாட்கள் தவிர, மற்ற நாட்களில், அவர் நோன்பிருந்து வந்தார்”.
 • B. யூதித்தின் பரிசுத்தம்:
 • 1. யூதித் அழகானவர், செல்வந்தர் - யூதி 8:7.
 •   “யூதித் பார்வைக்கு அழகானவர். தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண்பெண் பணியாளர்களோடு, பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவை எல்லாம் யூதித்தின் உடமைகள்”.
 • 2. ஆயினும், யூதித் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தார் - யூதி 8:8.
 •   “யூதித்து, கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப் பற்றி, யாரும் தவறாகப் பேசியதில்லை”.
 • C. யூதித்தின் இந்த நோன்பு வாழ்வின் பலன் என்ன?
 • 1. மீட்பு 2. அபிஷேகம்
 • 1. மீட்பு:
 •   எதிரிப்படையால், மக்களுக்கு உண்டான துன்பத்தை நீக்க, மூப்பர்களோடு ஆலோசனை செய்தார் - யூதி 8:9-36.
 •   எதிரியை அழிக்க, யூதித்தின் இறைவேண்டல் - யூதி 9:1-14.
 •   ஒலோபெர்னஸின் தலையை துண்டித்து, இஸ்ராயேலை மீட்டல் - யூதி 13:1-14.
 • 2. அபிஷேகம்:
 •   எதிரிகளை சூறையாடி, மக்கள் பெரும் செல்வத்தை சேர்த்தனர் - யூதி 15:6,7.
 •   யூதித்தை இஸ்ராயேலின் பெரியோர் வந்து வாழ்த்தினர் - யூதி 15:8-10.
 •   யூதித்தோடு மக்கள் வெற்றிப்பவனி சென்றனர் - யூதி 15:11-13.
 •   யூதித் அக்களிப்பால் நிறைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடினார் - யூதி 16:1-20.
 •   யூதித், இன்னும் அதிகமாய் கடவுளுக்குப் பிரியமானவர் ஆனார்.
 •   இஸ்ராயேல் மக்களும், கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்தனர்.
 •   “அவருடைய புகழ், ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில், நூற்றைந்து வயது வரை, உயிர் வாழ்ந்தார் - யூதி 16:23.
 •   “யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும், அவர் இறந்து நெடுங்காலத்திற்குப் பிறகும், எவரும் இஸ்ராயேல் மக்களை மீண்டும் அச்சுறுத்தவில்லை – யூதி 16:28.

யூதித்தின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு (யூதி 8:4-6)