யோவேலில் நோன்பு (யோவே 1:2 – 2:29.)

யோவேலில் நோன்பு (யோவே 1:2 – 2:29.)

 • A. யார் யார் நோன்பிருக்கணும்?
 • 1. கடவுளின் ஊழியர் - யோவே 2:17.
 •   குருக்கள் - 1:9,13, 2:17.
 •   பலிபீடத்தில் பணிபுரிபவர்
 •   மூப்பர் - யோவே 2:16.
 • 2. இறைமக்கள் - யோவே 2:16.
 •   1. மாசற்ற நீதிமான்கள்
 •   பால் குடிக்கும் குழந்தைகள்
 •   பிள்ளைகள்
 •   2. மன – சரீர – உலக மாசுபடிந்தவர்:
 •   மணமகள் - மஞ்சம் - 2:16.
 •   மணமகன் - மண அறை – 2:16.
 • B. எப்படி நோன்பிருக்கணும்?
 • 1. மன, சரீர – உலக ஆசைகளைக் கட்டுப்படுத்தி, தன்னடக்கத்தோடு:
 •   மஞ்சத்தை விட்டுப் புறப்பட்டு (செயல்) - 2:16.
 •   மண அறையை விட்டு வெளியேறி (சூழ்நிலை) – 2:16.
 • 2. பரிகாரம் செய்து:
 •   சாக்கு உடை உடுத்தி – 1:8,13.
 •   இரவில் சாக்கு உடை அணிந்து – 1:13.
 •   உண்ணா நோன்பிருந்து – 1:14.
 • 3. முழு தீர்மானத்தோடு:
 •   நோன்புக்கு நாள் குறித்து – 1:14, 2:15.
 •   முழு இதயத்தோடு – 2:12.
 • 4. மனஸ்தாபத்தோடு :
 •   இதயத்தைக் கிழித்துக்கொண்டு – 2:13.
 •   தேம்பி அழுதுகொண்டு – 1:13.
 • 5. வெளிப்படையாக துக்கித்து:
 •   அலறி புலம்பி – 1:13.
 •   அழுது புலம்பி – 2:12.
 • 6. சபையாக சேர்ந்து:
 •   எக்காளம் ஊதி – 2:15.
 •   வழிபாட்டு பேரணியை திரட்டி – 1:14, 2:15.
 • 7. ஆலய வழிபாட்டோடு இணைந்து:
 •   கோயிலில் கூடி வந்து – 1:14.
 •   கோயிலின் முன் அழுது புலம்பி – 1:14, 2:17.
 • C.எப்போது நோன்பிருக்க வேண்டும்?
 • 1. எச்சரிக்கும் துன்பத்தை கண்டவுடன்:
 •   விளைச்சல்களை வெட்டுக்கிளிகள் தின்னத்தொடங்கின – யோவே 1:4.
 •   வேற்றினம் ஒன்று நாட்டுக்கு எதிராகத் திரும்புகிறது – யோவே 1:6.
 •   உணவுப்பொருளெல்லாம், பாழாய் போகின்றன – யோவே 1:16.
 •   மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமல் போயின – யோவே1:16.
 •   மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லை – யோவே 1:18.
 •   மேய்ச்சல் நிலம் நெருப்புக்குள்ளானது – யோவே 1:19.
 •   தண்ணீரின்றி, காட்டு விலங்குகள் தவிக்கின்றன – யோவே 1:20.
 • 2. ஆண்டவரின் இறுதி தண்டனை வரும் முன் - யோவே 1:15.
 • 3. இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்புங்கள் - யோவே 2:12.
 • D.நோன்பின் பலன் என்ன?
 • 1. மீட்பு (யோவே 2:18,23,26,27)
 •   அப்போது ஆண்டவர், நாட்டின்மீது கருணை காட்டுவார் - யோவே 2:18.
 •   முன்போலவே கடவுள், மன்மாரியும் பின்மாரியும் தந்தார் - யோவே 2:23.
 •   வேண்டிய மட்டும், உணவு கிடைக்கும், நிந்தை இல்லாமல் போகும் - யோவே 2:26.
 •   இஸ்ராயேல் மக்கள் நடுவே, கடவுள் இனி வாசம் செய்வார் - யோவே 2:27.
 • 2. அபிஷேகம் (யோவே 2:28,29)
 •   அதற்குப்பின்பு, யாவர் மேலும், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:28.
 •   புதல்வர், புதல்வியர் இறைவாக்குரைப்பர் - யோவே 2:28.
 •   முதியோர், கனவுகள் காண்பர் - யோவே 2:28.
 •   இளைஞர் காட்சிகள் காண்பர் - யோவே 2:28.
 •   பணியாளர், பணிப்பெண்கள் மேல், ஆவியைப் பொழிவேன் - யோவே 2:29.

யோவேலில் நோன்பு