சாக்கு உடை

சாக்கு உடை

 • A. மனத்துயரத்தை வெளிப்டுத்த:
 •   யாக்கோபு, இடுப்பில் சாக்கு உடை கட்டிக்கொண்டு, பல நாட்கள், மகன் யோசேப்புவுக்காக, துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34.
 •   சீரியர், சாக்கு துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு, இஸ்ராயேல் அரசனிடம் வந்தனர் - 1அர 20:31,32.
 •   எசேக்கியா மன்னன், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, ஆலயத்தில் நுழைந்தார் - 2அர 19:1.
 •   என் சாக்குத் துணியை களைந்துவிட்டு, என்னை மகிழ்ச்சியால் உடுத்தினீர் - தாவீது – தி.பா 30:11.
 • B. மனஸ்தாபத்தை வெளிப்படுத்த:
 •   “சாக்கு உடை அணியுங்கள்” என்று, தாவீது கட்டளையிட்டார் - 2சாமு 3:31.
 •   தாவீதும், பெரியோர்களும், சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்தனர் - 1குறி 21:16.
 •   எஸ்தரும் பெரியோர்களும், சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டனர் - எஸ் 4:1-4.
 •   தெருவில் நடமாடுவோர், சணல் ஆடை உடுத்தினர் - எசா 15:3.
 •   எசேக்கியா மன்னன், சாக்கு உடையால், தம்மை மூடிக்கொண்டு, ஆலயம் சென்றார் - எசா 37:1,2.
 •   பெரியோர், சிறியோர் என, நினிவே மக்கள் அனைவரும், சாக்கு உடை உடுத்திக்கொண்டனர் - யோனா 3:5.
 •   என் சாட்சிகள், சாக்கு உடை உடுத்தி, இறைவாக்குரைப்பர் - வெளி 11:3.
 • C. பாவப்பரிகாரமாக:
 •   அய்யாவின் மகள் இரிசபா, தனக்காக சாக்கு உடையை பாறை மீது விரித்து, மழை பொழியுமட்டும் இருந்தாள் - 2சாமு 21:10.
 •   ஆகாபு, வெற்றுடலில் சாக்கு உடை உடுத்தி, சாக்குத் துணியில் படுத்தான் - 1அர 21:27.
 •   நாட்டின் பஞ்சத்தைக் கண்ட, இஸ்ராயேல் மன்னன், கோணி ஆடை அணிந்தான் - 2அர 6:30.
 •   எசேக்கியா மன்னன், குருக்களில் முதியோரை, சாக்கு உடை உடுக்கச் செய்தார் - 2அர 19:2.
 •   சாக்கு உடையை உடலுக்குத் தைத்தேன். புழுதியில் , மேன்மையை புதைத்தேன் - யோபு – யோபு 16:15.
 •   நான் நோயுற்றிருந்த போது, சாக்கு உடை உடத்திக்கொண்டேன் - தாவீது – தி.பா 35:13.
 •   சாக்குத்துணியை என் உடையாகக் கொண்டேன் - தாவீது – தி.பா 69:11.
 •   ஆடம்பர உடைக்குப் பதில், சாக்கு உடை உடுத்துவர் - எசா 3:24.
 •   வான்வெளியை, சாக்கு உடையால் போர்த்துகின்றேன் - எசா 50:3.
 •   அனைவரும், சாக்கு உடை உடுத்திக் கொள்வர் - எசே 7:18.
 •   சாக்கு உடை உடுத்திக்கொண்டு, உனக்காக உள்ளம் நொறுங்கி அழுவர் - (தீர் நகர்) – எசே 27:31.
 •   எல்லாரும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தச் செய்வேன் - ஆமோ 8:10.
 •   மனிதரும், விலங்குகளும், சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும் - யோனா 3:8.
 •   நினிவே அரசன், சாக்கு உடை உடுத்தி, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.
 •   சாக்கு உடை அணிந்து, புழுதியை பூசி, நோன்பிருக்க ஒன்றுகூடினர் - நெகே 9:1
 • D. கடவுளின் கட்டளை:
 •   சாக்கு உடை உடுத்த, ஆண்டவர் கட்டளையிட்டார் - எசா 22:12.
 •   இடையில், சாக்கு உடையைக் கட்டிக்கொள்ளுங்கள் - எசா 32:11.
 •   சாக்கு உடை உடுத்துங்கள், ஒப்பாரி வையுங்கள் - எரே 4:8
 •   குருக்கள், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, தேம்பி அழுங்கள் - யோவே 1:13.
 •   கணவனாக வரவிருந்தவனை இழந்ததால், சாக்கு உடை உடுத்தும் கன்னிப்பெண் போல், கதறி அழுங்கள் - யோவே 1:8.
 •   சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள் - எரே 4:8.
 •   சாக்கு உடை உடுத்துங்கள், சாம்பலில் புரளுங்கள் - எரே 6:26.
 • E. நோன்பிருந்து, பாவப்பரிகாரம் செய்வதன் வெளி அடையாளம்:
 •   சாக்கு உடையையும், சாம்பலையும் அணிவதா நோன்பு – எசா 58:5.
 •   அவர்களின் இடைகளில், சாக்கு உடை காணப்படுகிறது (மோவாபு) – எரே 4:37.
 •   சாக்கு உடை உடுத்தினர், தலைகளை தரைமட்டும் தாழ்த்தினர் - புல 2:10.
 •   நான் சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து வேண்டினேன் - தானி 9:3.
 •   சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் அமர்ந்து, மனம் மாறியிருப்பர் - மத் 11:21, லூக் 10:13.

சாக்கு உடை