சாம்பல் - மண் - புழுதி

சாம்பல் - மண் - புழுதி

 • A. மனித உடல் உருவானது:
 •   கடவுள், நிலத்தின் மண்ணால், மனிதனை உருவாக்கினார் - தொ.நூ 2:7.
 •   எல்லாம் மண்ணிலிருந்தே தோன்றின – ச.உ 3:20.
 • B. மனித உடல் செல்ல வேண்டிய இடம்:
 •    நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால், அதற்கு திரும்புவாய் - தொ.நூ 3:19.
 •   நீ மண்ணாய் இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் - தொ.நூ 3:19.
 •   மணிதர் மீண்டும் மண்ணுக்கே திரும்புவர் - யோபு 34:15.
 •   நீர் மூச்சை நிறுத்தினால், உயிரினங்கள் மாண்டு, மறுபடியும் புழுதிக்கேத் திரும்பும் - தி.பா 104:29.
 •   மண்ணிலிருந்து வந்த உடல், மண்ணுக்கே திரும்பும் - ச.உ 12:7, 3:20.
 • C. நிலையில்லா, பயனில்லா – தாழ்ந்த – நிலைக்கு அடையாளம்:
 •   தூசியும், சாம்பலுமான நான், என்று ஆபிரகாம் கூறுகின்றார் - தொ.நூ 18:27.
 •   புழுதியினின்று ஏழைகளை உயர்த்துகின்றார் - 1சாமு 2:8.
 •   குப்பையினின்று வறியவரை தூக்கி விடுகின்றார் - 1சாமு 2:8.
 •   சிமயி, தாவீதை புழுதியை வாரி எறிந்து, தூற்றினான் - 2சாமு 16:13.
 •   தூசிக்கு நிகரான உன்னை, உயர்த்தினேன்” என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறுகின்றார் - 1அர 16:2.
 •   “புழுதியும் சாம்பலும் போல் ஆனேன்” என்று யோபு கூறுகின்றார் - யோபு 30:19.
 •   நாம் தூசி என்பது, அவர் நினைவிலுள்ளது – தாவீது – தி.பா 103:14.
 •   ஏழையை தூசியினின்றும், வறியவனை குப்பை மேட்டினின்றும், தூக்கி விடுகின்றார் - தி.பா 113:7.
 •   யோபு சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.
 • D. மனஸ்தாபத்தை வெளிப்படுத்த:
 •   இஸ்ராயேலர், தோல்வியுற்ற போது, யோசுவாவும், இஸ்ராயேலின் முதியோரும், பேழையின் முன், முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலை மீது, புழுதியை வாரிப் போட்டுக் கொண்டனர் - யோசு 7:6.
 •   நாடு தோல்வியுற்ற போது, சீயோனின் பெரியோர், தங்கள் தலைமேல் புழுதியை தூவிக் கொண்டனர் - புல 2:10.
 •   தீர் நாட்டின் அழிவைப் பற்றி, எசேக்கியேல் இறைவாக்கினர் எச்சரிக்கின்றார். “மாலுமிகள், புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர். சாம்பலில் புரண்டழுவர்”- எசே 27:30.
 •   பாபிலோனியர், தங்கள் தலைமேல், புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு, அழுது புலம்பினர் - வெளி 18:19.
 • E. மனத்துயரத்தை வெளிப்படுத்த:
 •   யோபுவின் நலம் விசாரிக்க வந்த நண்பர்கள், தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டனர் - யோபு 2:12.
 •   துயரத்தின் உச்சக்கட்டத்தில் யோபு, “நான் மண்ணுக்கு உறங்கப் போகிறேன்” என்கிறார் - யோபு 7:21.
 •   யோபு புழுதியிலும், சாம்பலிலும் இருந்து, மனம் வருந்துகிறேன் என்கிறார் - யோபு 42:6.

சாம்பல் - மண் - புழுதி