நோன்புக்கு ஆயத்தம்

நோன்புக்கு ஆயத்தம்

 • கடவுள், எசேக்கியா மன்னனை நோன்புக்கு ஆயத்தம் செய்தார்:
 • 1. எசேக்கியா மன்னன், கடவுளுக்குப் பிரியமானவர்.
 •   அவர், ஆலயத்திலும், வழிபாட்டிலும், திருச்சட்டத்திலும், பல மறுமலர்ச்சிகளை செய்தார் - 2குறி 29,30,31 அதி.
 • 2. எனவே, கடவுள் அவரை ஆசீர்வதித்தார்.
 •   பல செல்வங்களால் நிரப்பினார் - 2குறி 32:27-30.
 • 3. பின்னர், எசேக்கியா கடவுளை விட்டுப் பிரிந்தார்:
 •   செருக்கு, அவரை கடவுளிடமிருந்து பிரித்தது – 2குறி 32:25.
 • 4. கடவுள், எசேக்கியாவுக்கு கொடுத்த எச்சரிக்கை:
 •    வியாதியைக் கொடுத்தார் .
 •   “வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்து” என்றார் - 2அர 20:1.
 •   அதுவே அவருக்கு, நோன்பிருக்க விடுத்த அழைப்பானது.
 • 5. எசேக்கியா எவ்வாறு நோன்பிருந்தார் :
 •   தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார். அதாவது ,
 •   சுவர்ப்பக்கமாகத் திரும்பினார் - எசா 38:2.
 •   தான் செய்த நன்மைத்தனங்களை சொல்லி, கதறி அழுதார் - எசா 38:3.
 •   கண்ணீர் விட்டு, புலம்பி ஜெபித்தார் - எசா 38:10-16.
 •   தன்னை தரைமட்டும் தாழ்த்திக்கொண்டார்.
 •   இவ்வாறு, எசேக்கியா நோன்பிருந்து, வீட்டுக்காரியங்களை ஒழுங்குப்படுத்தினார்.
 • நோன்பிருக்க ஆயத்தம் செய்த மற்றவர்கள்:
 • 1. எஸ்தர் மக்களை ஆயத்தப்படுத்துதல் :
 •   ஆமானின் சூழ்ச்சியினால், யூதகுலம் முழுவதும், அழிக்கப்படும் நிலையில் இருந்தது – எஸ் 3:13.
 •   அப்போது, யூதகுலம் மீட்படையும்படியாக, மூன்று நாட்கள் நோன்பிருக்குமாறு, எஸ்தரும், மார்தொக்கேயும், மக்களை ஆயத்தம் செய்தனர் - எஸ் 4:16.
 • 2. நினிவே அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :
 •   இன்னும் நாற்பது நாட்களில், நினிவே அழிக்கப்படும்” என்ற யோனாவின் எச்சரிக்கை வார்த்தை, நினிவே மக்களுக்கு, நோன்புக்கு ஆயத்தமாக இருந்தது – யோனா 3:4,5.
 •   நினிவே அரசனின் கட்டளை, மக்கள் அனைவரையும், நோன்பிருக்க ஆயத்தம் செய்தது – யோனா 3:7,8.
 •   குடும்பத்தில், பெற்றோர், பெரியோர், குடும்பத்தின் காரியங்களை கவனித்து, நோன்புக்கு ஆயத்தம் செய்தனர்.
 • 3. யோசேபாத் அரசன் மக்களை ஆயத்தப்படுத்துதல் :
 •   எதிர் நாட்டு அரசர்கள், படையெடுத்து வந்தபோது, யோசேபாத், கட்டளை மூலமாக, யூதா மக்களை நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - 2குறி 20:3.
 • 4. எஸ்ரா மக்களை ஆயத்தப்படுத்துதல்:
 •   எஸ்ரா, தங்கள் பயணம் நலமாக அமைய வேண்டுமென்று, உபதேசம் மூலமாக, மக்களை நோன்புக்கு ஆயத்தம் செய்தார் - எஸ்ரா 8:21.
 • 5. வானதூதர் சிம்சோனின் பெற்றோரை ஆயத்தம் செய்தல்:
 •   சிம்சோனின் பெற்றோரை, வானதூதர் நோன்பிருக்க ஆயத்தம் செய்தார் - நீ.த 13:4,5.
 •   பிள்ளைகள் நோன்பிருக்க, பெற்றோர் பிள்ளைகளை ஆயத்தம் செய்ய வேண்டும் (உ.ம்) சிம்சோன் நோன்பு வாழ்வு வாழ, சிம்சோனை ஆயத்தப்படுத்தும்படி, அவர் பெற்றோரை, வானதூதர் கட்டளை மூலமாக, ஆயத்தம் செய்கின்றார் - நீ.த 13:13,14.

நோன்புக்கு ஆயத்தம்