விடுதலை அளிக்கும் நோன்பு

விடுதலை அளிக்கும் நோன்பு

 • 1. யோபு - “துன்பத்திலிருந்து மீட்புக்காக”
 •   யோபு தனக்குள்ள எல்லாவற்றையும், இழந்த போது, சாம்பலில் உட்கார்ந்தார் - யோபு 2:8.
 •   “என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார்” என்று நம்பினார் - யோபு 19:25.
 •   விடுதலை - இருமடங்கு ஆசீரைப் பெற்றுக்கொண்டார் - யோபு 42:10,11.
 • 2. எஸ்ரா- “மக்களின் மீட்புக்காக”
 •   எஸ்ரா உண்ணாமலும், குடிக்காமலும், மக்களின் குற்றத்திற்காக நோன்பிருந்து அழுது புலம்பினார் - எஸ்ரா 10:6.
 •   மக்களுக்கு, குற்றத்தை சுட்டிக்காட்டி, எச்சரித்தார் – எஸ்ரா 10:10,11.
 •   விடுதலை - மக்கள், தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டு, மனம் திரும்பினர் - எஸ்ரா 10:1-2,12.
 • 3. நெகேமியா- “எருசலேமின் மீட்புக்காக”
 •   நெகேமியா எருசலேமைக் குறித்து, பல நாட்கள் துக்கம் கொண்டாடினார். தரையில் உட்கார்ந்து அழுதார். நோன்பிருந்து, கடவுளிடம் மன்றாடினார் - நெகே 1:4.
 •   பாவங்களை அறிக்கையிட்டார் - நெகே 1:5,6.
 •   விடுதலை - எருசலேம் நகர், நெகேமியாவால் கட்டி எழுப்ப, கடவுள் திருவுளம் கொண்டார் - நெகே 2:5-8.
 • 4. இஸ்ராயேல் மக்கள்- “அன்னிய அரசனிடமிருந்து பாதுகாக்க”
 •   ஆண்கள் நோன்பிருந்து, தங்களைத் தாழ்த்தினர் - யூதி 4:9.
 •   பெண்களும், சிறியோர்களும், இடுப்பில் சாக்கு உடை உடுத்தி, தலையில் சாம்பலைத் தூவினார்கள் - யூதி 4:10,11.
 •   சாக்கை விரித்து, கோயிலின் முகப்பில் விழுந்து கிடந்தனர் - யூதி 4:11.
 •   சாக்கு உடை அணிந்து, தன்னார்வக் காணிக்கைகளும், எரிபலிகளும், நேர்ச்சைகளும், செலுத்தினார்கள் - யூதி 4:14.
 •   விடுதலை - ஆண்டவர் அவர்களின் குரலுக்கு, செவிசாய்த்தார். அவர்களின் துயரத்தைக் கண்ணுற்றார் - யூதி 4:13.
 • 5. எஸ்ராவும், மக்களும் - “பயணம் நலமாக அமைய”
 •   எஸ்ராவும், மக்களும், தங்கள் பயணம் நலமாக அமைய, அகாபு ஆற்றருகே நோன்பிருந்தனர் - எஸ்ரா 8:21.
 •   விடுதலை - ஆண்டவர் அவர்களின் மன்றாட்டைக் கேட்டார் - எஸ்ரா 8:23.
 • 6. யூதாவும் மக்களும்- “போரில் வெற்றி கிடைக்க”
 •   இஸ்ராயேல் மக்கள், கூட்டாக மிஸ்பாவுக்குச் சென்றனர்.
 •   நோன்பிருந்து, சாக்கு உடை உடுத்தி, சாம்பல் தூவினர் - 1மக் 3:47.
 •   எதிர்த்து வந்தவர்கள், ஓடிப்போனார்கள் - 1மக் 4:22.
 •   விடுதலை - அன்றே இஸ்ராயேலுக்கு மீட்பு வந்தது – 1மக் 4:25.
 • 7. ஆகாபு- “தீமை வராமல் பாதுகாக்க”
 •   நாபோத்தைக் கொன்று, பாவம் செய்ததற்காக, எலியா இறைவாக்கினர், ஆகாபை எச்சரித்தார் - 1அர 21:17-25.
 •   எச்சரிக்கையின் வார்த்தையைக் கேட்ட ஆகாபு, வெற்றுடலின் மீது, சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்து, சாக்குத்துணி மீது படுத்தான் - 1அர 21:27.
 •   விடுதலை - ஆகாபு, தன்னைத் தாழ்த்திக் கொண்டதால், அவனுக்கு தீமை வராமல், காப்பாற்றப்பட்டான் - 1அர 21:29.
 • 8. யூதாவும் சகோதரர்களும் - “திரு உறைவிடம் தூய்மைப்பட”
 •   எதிரிகளால் தீக்கிரையாக்கப்பட்ட, திரு உறைவிடத்;தைக் கண்டு, யூதாவும், சகோதரர்களும், அழுது புலம்பிக் கொண்டு, சாம்பலைத் தூவிக் கொண்டார்கள் - 1மக் 4:39.
 •   நெடுஞ்சாண்கிடையாய் கிடந்து, ஆண்டவரை மன்றாடினார்கள் - 1மக் 4:40.
 •   பலிபீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அர்ப்பண விழா கொண்டாடினர் - 1மக் 4:59.
 •   விடுதலை - மக்களிடையே பழிச்சொல் நீங்கி, அக்களிப்பு நிலவியது - 1மக் 4:59.
 • 9. யூதாவும் மக்களும்- “கடவுளின் உதவி பெற”
 •   திருச்சட்டம், நாடு, திருக்கோவில், போன்றவை இழக்கும் தருவாயில் இருந்ததால், அவர்கள் பிற இனத்தாரின் கையில் விழாதிருக்க, மூன்று நாட்கள்,
 •   இடைவிடாமல், உண்ணா நோன்பிருந்து, மன்றாடினர் - 2மக் 13:10,12.
 •   ஆண்டவரின் உதவி, யூதாவுக்கு பாதுகாப்பு அளித்ததால், பகைவர்கள் அழிக்கப்பட்டனர் - 2மக் 13:17.
 •   விடுதலை - “கடவுளுக்கே வெற்றி” என்று, போர்க்குரல் எழுப்பினர் - 2மக் 13:15.
 • 10. நினிவே மக்கள் - “கடவுளின் இரக்கத்திற்காக”
 •   இன்னும் நாற்பது நாளில், நினிவே அழிக்கப்படும் என்ற யோனாவின் எச்சரிக்கையை கேட்ட போது, பெரியோர், சிறியோர், அனைவரும் சாக்கு உடை உடுத்தினர் - யோனா 3:5.
 •   நினிவே அரசன் சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான் - யோனா 3:6.
 •   விடுதலை - எனவே, கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, தண்டனையை அனுப்பவில்லை – யோனா 3:10.
 • 11. யூதித் - “இஸ்ராயேலின் மீட்புக்காக, எதிரியை அழிக்க”
 •   யூதித் குப்புற விழுந்து, தலையில் சாம்பலை தூவிக் கொண்டார் - யூதி 9:1.
 •   நோன்பு முடித்து, சாக்கு உடையை களைந்துவிட்டு, ஆலயத்தில் உரத்தக் குரலில் மன்றாடினார் - யூதி 9:1.
 •   மன்றாட்டை முடித்து விட்டு, எதிரியான ஒலோபெர்னஸை சந்திக்கச் சென்றார் - யூதி 10:1,6.
 •   விடுதலை - கடவுள் யூதித்தைக் கொண்டே, எதிரியை வீழ்த்தினார் - யூதி 13:8.

விடுதலை அளிக்கும் நோன்பு