பழைய ஏற்பாட்டில் நோன்பு :

பல்வேறு கருத்துக்களுக்காக, நோன்பிருந்தவர்கள்

 • 1. மோசே – “இறை வழிநடத்தல் பெற”
 •   மோசே, சீனாய் மலையில், நாற்பது நாட்கள், ஆண்டவருடன் இருந்தார் - வி.ப 34:28.
 •   அவர் அப்பம் உண்ணவுமில்லை, தண்ணீர் பருகவுமில்லை – வி.ப 34:28.
 •   கடவுளிடமிருந்து, பத்துக் கட்டளைப் பெற்றார் - வி.ப 34:28,29.
 • 2. எலியா– “கடவுளின் பாதுகாப்பு பெற”
 •   எலியா நாற்பது இரவும் பகலும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார் - 1அர 19:8.
 •   எதிர்த்தவர்களை வீழ்த்த, கடவுள் துணை செய்தார் - 1அர 19:17,18.
 • 3. தானியேல் - a.“பாவமன்னிப்புக்காக”
 •   தானியேல் நோன்பிருந்து, சாக்கு உடை அணிந்து, சாம்பலில் அமர்ந்து, வேண்டினார் - தானி 9:3.
 •   பாவ அறிக்கை செய்தார் - தானி 9:4-19.
 •   தானியேலின் மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 9:23,24.
 • b.“மனத்திடன் கிடைக்க”
 •   தானியேல் மூன்று வாரங்கள், நோன்பிருந்து ஜெபித்தார் - தானி 10:2,3.
 •   அவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – தானி 10:12.
 • 4. தாவீது - a. "மனத்துயரத்தைப் போக்க"
 •   சவுல், யோனத்தான் ஆகியோரின் இறப்பைக் குறித்து, அழுது புலம்பி, தாவீது மாலைவரை நோன்பிருந்தார் - 2சாமு 1:12.
 • b.“குழந்தைக்கு நலம் கிடைக்க ”
 •   தாவீது, தன் குழந்தை சாகுந்தருவாயில் இருந்தபோது, உண்ணா நோன்பு மேற்கொண்டு, தரையில் படுத்துக் கிடந்தார் - 2சாமு 12:16,22.
 • c.“பாவ மன்னிப்புக்காக”
 •   தாவீது, சாக்கு உடை உடுத்தி, முகங்குப்புற விழுந்து கிடந்தார் - 1குறி 21:16.
 •   நானே குற்றவாளி என்று அறிக்கையிட்டார் - 1குறி 21:17.
 •   அவரது மன்றாட்டு கேட்கப்பட்டது – 1குறி 21:18-22.
 • 5. இஸ்ராயேல் மக்கள்- "சபையார் நோன்பு"
 •   கூடாரத் திருவிழா முடியும் நாளில், இஸ்ராயேல் மக்கள், நோன்பிருக்குமாறு ஒன்று கூட்டப்பட்டனர் - நெகே 9:1.
 •   அவர்கள் தங்கள் தலைமேல், புழுதியைப் பூசிக்கொண்டு, நோன்பிருந்தனர் - நெகே 9:1
 •   தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் - நெகே 9:3.
 • 6. மத்தத்தியாவும் மைந்தர்களும் - “எருசலேமிற்காக”
 •   எருசலேம், அன்னியர் கையில் அகப்பட்டதால், மத்தத்தியாவும், அவருடைய மைந்தர்களும், சாக்கு உடை உடுத்திக்கொண்டு, அழுது புலம்பினர் - 1மக் 2:14.

பல்வேறு கருத்துக்களுக்காக, நோன்பிருந்தவர்கள்