முடிவுரை

முடிவுரை

 • ஆவிக்குரிய நோன்பின் ஆரம்பம் ஏதேன் தோட்டத்தில்
 •   நோன்பின் “தேவை” என்ன என்று கேட்டால், “கடவுளின் விருப்பத்தின் படி வாழ்வதற்கு நோன்பு தேவை” என்று நாம் கூறுவோம்.
 •   ஆதி மனிதன், உலகம், பிசாசு, உடலின் மட்டில், தன்னடக்கம், கட்டுப்பாடோடு, வாழாததால், , உலகம், பிசாசு, சரீர விருப்பங்களுக்கு அடிமையாகி கடவுளின் விருப்பத்தை மீறினான் - தொ.நூ 2:16,17, 3:1-6.
 •   ஆதிப்பெற்றோர், தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற, “நோன்பு” வாழ்க்கை வாழாததே “பாவம்” உண்டாகக் காரணம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
 •   இதனால், பாவத்தின் விளைவான, “துன்பத்துக்கும்” மனிதன் அடிமையானான் - தொ.நூ 3:14-19.
 •   இவ்வாறு, “நோன்பு வாழ்க்கையை” ஆதிமனிதன் இழந்ததால், “பாவ”, “துன்ப” நிலைக்கு, அவன் அடிமையானான்.
 • இந்நிலை மாற கடவுள் தந்த “முதல் உபதேசம்
 •   ஆதி மனிதனிடம், பாவம் பலுகிப்பெருகியது போலவே, துன்பமும் பலுகிப் பெருகியது.
 •   பாவத்தில் விழுந்த ஆதிப்பெற்றோரின், முதல் பிள்ளைகளையும், அந்த பாவமும், துன்பமும் பற்றிக்கொண்டது.
 •   காயீன் கொலையாளியானான் (பாவம்), ஆபேல் கொலை செய்யப்பட்டான் (துன்பம்).
 •   இதைக் கண்ணுற்ற கடவுள், காயீனுக்கு முதல் “உபதேசம் கொடுத்தார்”.
 • தன்னடக்கமே, பாவ – துன்பத்தை வெல்லும் வழி
 •   “பாவம் உன்மேல் வேட்கைகொண்டு, உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை “அடக்கி” ஆள வேண்டும் - தொ.நூ 4:7.
 •   இதன் பொருள்:- “கடவுளுக்கு விருப்பமானதை செய்ய விடாதபடி, உலகம், பிசாசு, சரீரத்துக்கு விருப்பமானதை செய்ய, உனக்கு உள்ளும் புறமும், தூண்டுதல்
 •   இருக்கும். ஆனால், நீ அதை “தன்னடக்கம், கட்டுப்பாடு” எனும் நோன்பால் மேற்கொள்ள வேண்டும்” .
 •   இதுவே, மனித குலத்துக்கு, ஏதேன் தோட்டத்தில் கடவுள் அருளிய உபதேசம்.
 •   ஆவிக்குரிய வாழ்வில், நிலைத்து நிற்க, தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற, “நோன்பு வாழ்வு” வேண்டும்.
 •   அது இல்லாததால், ஆதிப்பெற்றோர் ஆவிக்குரிய வாழ்வை இழந்தார்கள் - தொ.நூ 3:1-6, 14-19.
 •   மேலும், இழந்த ஆவிக்குரிய வாழ்வை, மீண்டும் பெற்றுக்கொள்ள, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற நோன்பு வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் - தொ.நூ 4:6,7.
 •   இதுவே, ஆவிக்குரிய நோன்பு பற்றிய கடவுளின் “ஆதி உபதேசம்”.
 • ஆவிக்குரிய வாழ்வின் பாதுகாப்பும் வளர்ச்சியும்
 •   எதிரியின் கையினின்று, ஆவிக்குரிய வாழ்வைப் “பாதுகாக்க”, அல்லது எதிரிக்கு அடிமையான நிலையிலிருந்து “மீண்டு வர”, தன்னடக்கம், கட்டுப்பாடு என்ற
 •   நோன்பு அவசியமே.
 •   ஆவிக்குரிய வாழ்வுக்கு (கடவுளின் விருப்பப்படி வாழ) எதிரிகளாகிய உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொள்ள வேண்டும்.
 •   அவ்வண்ணமே, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு, “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்யும்” வாஞ்சையும் வேண்டும்.
 • வேலியும், எருவும் போல:
 •   இது எப்படி என்றால், ஒரு செடியை நடுகிறோம்.
 •   அதைச்சுற்றி, செடியை “எதிரியிடமிருந்து பாதுகாக்க” “வேலி” அமைக்கிறோம்.
 •   பின்பு, “எரு போட்டு”, “தண்ணீர் ஊற்றுகிறோம்”.
 •   இதில், பயிருக்கு வேலி என்பது, நமக்கு “நோன்பு வாழ்வு” ஆகும்.
 •   பயிருக்கு “எருவும், தண்ணீரும்” என்பது, நமக்கு “ஆவியின் கனிகளும்”, “தேவசித்தம் செய்வதும்” ஆகும்.
 • போராட்டத்தில் ஜெபமும், வாளும் போல:
 •   “மதில் கட்டுவோரும், சுமை சுமப்போரும், ஒரு கையால் வேலை செய்தனர், மறுகையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்” – நெகே 4:17.
 •   “யூதாவும், மக்களும், கையால் போர் செய்துகொண்டும், உள்ளத்தால் ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள் - 2மக் 15:26,27.
 •   இங்கே எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற, “வாளும்”, “போரும்” உதவியது போல, நமக்கு “நோன்பு வாழ்வு” அமைகிறது.
 •   அவ்வாறே, ஒரு கையால் வேலை செய்தும், உள்ளத்தால் ஜெபித்தும், அவர்கள் கட்டி எழுப்பி, வெற்றி பெற்றது போல, நமக்கு ஆவியின் கனிகளோடும், ஆவிக்குரிய கடமைகளோடும், ஆவிக்குரிய வாழ்வை வளர்ச்சியின் பாதையில் கட்டி எழுப்புவோம்.
 • நோன்பிருக்க வாருங்கள்
 • பாடல், பண் - அருட்தந்தை.R. ஜாண் ஜோசப் அடிகள்
 • பல்லவி
 •   நோன்பிருக்க வாருங்கள் - இயேசுவோடு
 •   பாலைவனம் செல்ல வாருங்கள்
 • அனுபல்லவி
 •   உபவாசமே தவக்கோலமே
 •   தன்னடக்கம் கட்டுப்பாட்டை ஏற்க வாருங்கள்
 • சரணங்கள்
 • 1
 •   அபிஷேகம் பெற்றவர்கள் நோன்பிருக்கணும்
 •   பாலைவன சோதனையை ஏற்று வாழணும்
 •   ஆவியில் பெலனடைய பாடு ஏற்கணும்
 •   அன்றாடம் பெந்தக்கோஸ்து நாளைக் காணணும்
 • 2
 •   மணவாளன் இயேசுவைப் பிரியும் நேரத்தில்
 •   மணவாட்டி சபை சேர்ந்து நோன்பிருக்கணும்
 •   பிரிய வைக்கும் சக்தியோடு போராடணும்
 •   உறவை பெலப்படுத்த நோன்பிருக்கணும்
 • 3
 •   உலகம், பிசாசு, மாமிசத்தின் இச்சைகள்
 •   இயேசுவைப் பிரிக்கும் சக்தி என்றுணரணும்
 •   தன்னடக்க பயிற்சியை என்றும் செய்யணும்
 •   இலக்கை நோக்கி நோன்பிருந்து ஓடி ஜெயிக்கணும்
 • 4
 •   உலக ஆசை மேற்கொள்ளாமல் கட்டுப்படுத்தணும்
 •   பாவ இச்சை ஆண்டிடாமல் விழித்திருக்கணும்
 •   மாமிசத்தின் தேவைகளை கட்டுப்படுத்தணும்
 •   கட்டுப்பாடே நோன்பு என்று ஏற்று வாழணும்
 •   CPM பாமாலை :பாடல் எண் 373

முடிவுரை