இயேசுவும் பாலைவன நோன்பும்

இயேசுவும் பாலைவன நோன்பும்

 •   இறைவிருப்பத்துக்கு கட்டுப்பட்டு வாழும் போது, பாவ சோதனையும், துன்ப சோதனையும் நமக்கு உண்டாகும்.
 •   இந்த சோதனைகளை, உலகம், பிசாசு, உடல், ஆகிய மூன்றும் நமக்குத் தரும்.
 •   உலகம், பிசாசு, சரீரத்தை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு வெற்றிக்கொள்ளும் போது, பாவ துன்ப சோதனைகளையும், நாம் எளிதாக வெற்றி கொள்வோம்.
 •   இவ்வாறு வெற்றி கொள்வதால், நாம் இறைவிருப்பத்துக்கு என்றும் உறுதியாய் கட்டுப்பட்டிருப்போம்.
 •   ஆவிக்குரிய வாழ்வும் சீராக வளரும்.
 • இயேசுவுக்கு பாலைவனத்தில் பாவ, துன்ப சோதனை
 • 1. பாவ சோதனை
 •   அலகை – நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, என்னை வணங்கினால், உலக அரசையும், அதன் மேன்மையையும், உமக்குத் தருகிறேன் - மத் 4:8,9.
 •   இயேசு – உன் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வணங்கி, அவர் ஒருவருக்கே பணிவிடை செய்வாயாக – மத் 4:10.
 •   இவ்வாறு, கடவுளை மறுதலிக்கிற பாவ சோதனையை இயேசு வென்றார்.
 • 2. துன்ப சோதனை
 •   இயேசு பசியுற்றபோது, அலகை, “கற்களை அற்புதமாக அப்பமாக்கி உண்ணும்” என்று சோதித்தான் - மத் 4:3.
 •   அதற்கு இயேசு, “மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும், உயிர் வாழ்கிறான்” என்றார் - மத் 4:4.
 •   இவ்வாறு, துன்ப சோதனையையும், இயேசு வென்றார்.
 • இயேசுவின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?
 •   இயேசு உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் - கட்டுப்பாடோடு மேற்கொண்டதே – அதாவது "நோன்பிருந்ததே" காரணம்.
 • 1. உலகம்:
 •   அலகை இயேசுவை, உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று, உலக அரசையும், மேன்மையையும் காட்டி, இயேசுவை மயக்கப் பார்த்தான் - மத் 4:8.
 •   ஆனால், அந்த ஆசைக்கு இயேசு மயங்கவில்லை.
 • 2. பிசாசு :
 •   அலகை இயேசுவிடம், என்னை ஆராதித்தால், எல்லா உலக மேன்மைக்கும் நீர் சொந்தமாகலாம், என்று தந்திமாகப் பேசினான் - மத் 4:9.
 •   ஆனால், இயேசு விழிப்போடிருந்து, அவன் தந்திரத்தைப் புரிந்துகொண்டு, அவனைத் துரத்தினார் - மத் 4:10.
 • 3. உடல்:
 •   உண்ணாமல் இருந்த இயேசுவுக்கு, பசி உண்டாவதை உணர்ந்த அலகை, அங்கேயும் அவரை உடலின் இச்சைக்கு அடிமைப்படுத்தப் பார்த்தான் - மத் 4:3.
 •   ஆனால் இயேசு, இறைவார்த்தையைக் கைக்கொண்டு, உடலின் இச்சைகளை மேற்கொண்டார் - மத் 4:4.
 • இயேசு செய்த நோன்பு
 •   மேற்சொன்ன நிகழ்ச்சிகளிலிருந்து, உலகம், பிசாசு, உடலை, தன்னடக்கம் கட்டுப்பாடோடு, இயேசு மேற்கொண்டார் எனக் காண்கிறோம்.
 •   இதுவே இயேசு செய்த நோன்பு.
 •   இந்த தன்னடக்கம் கட்டுப்பாடு என்ற நோன்பால், இயேசு உலகம், பிசாசு, சரீரத்தை மேற்கொண்டு, பாவ துன்ப சோதனையை வென்றார்.
 •   இவ்வாறு, ஆவிக்குரிய வாழ்வில் நிலைத்து, ஆவியின் வல்லமை பூண்டார் - லூக் 4:14.

பழைய ஏற்பாட்டில் நோன்பு