இயேசுவின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு

இயேசுவின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு

 • A. இயேசுவின் வாழ்வும் அருட்பொழிவும்
 •   இயேசு, மீட்பராகவே பிறந்தார் - மத் 1:21.
 •   எனவே, இயேசுவிடம் மீட்பு இருந்தது.
 •   அந்த மீட்பை உறுதிப்படுத்த – 2கொரி 1:21,22; 5:5, இயேசு அருட்பொழிவு பெற்றார் - மத் 3:16.
 •   இயேசுவின் பணி, அருட்பொழிவோடு ஆரம்பமாகிறது – லூக் 4:17,18.
 •   எனவே அவர், மெசியா அதாவது ஆவிக்குரிய இயேசுவானார்.
 • B. இயேசுவின் ஆவிக்குரிய வாழ்வும், நோன்பும்
 •   ஆவிக்குரிய வாழ்வு என்பது, சொந்த விருப்பம் போல் வாழாது, கடவுளின் விருப்பம் போல் வாழும் வாழ்வு.
 •   கடவுளின் விருப்பம் போல், ஒருவர் வாழ வேண்டுமென்றால், அவர் “தன் சுய விருப்பங்களை” கட்டுப்படுத்த வேண்டும்.
 •   ஒரு மனிதரின் “சுய விருப்பங்கள்” எவற்றில் அடங்கியுள்ளன?
 •   அவரது உலக மோகங்களில்,
 •   அவரது உடலின் இச்சைகளில்,
 •   அவரை சுற்றி வரும் அலகையின் தந்திரங்களில்.
 •   இவற்றை எல்லாம், “தன்னடக்கம் -கட்டுப்பாடு” எனும் நோன்பால் வெற்றி கொள்ள வேண்டும்.
 •   இதுவே ஆவிக்குரிய நோன்பு.
 •   இயேசுவும் இத்தகைய ஒரு வாழ்வையே வாழ்ந்தார்.
 • உலகம்
 • இந்த உலகத்தோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும் உறவும்
 • A. பாவ உலகம்:
 •   தீயவனின் பிடியில் உள்ள உலகம் - 1யோவா 5:19.
 •   பாவ உலகம் - 2பேது 2:5, உரோ 5:12,13.
 •   நெறிகெட்ட உலகம் - யாக் 3:6.
 •   இருள் நிறைந்த உலகம் - எபே 6:12.
 •   குற்றம் நிறைந்த உலகம் - 2கொரி 5:19.
 • B.உலகமும் கடவுளும்:
 •   உலகம், கடவுளோடு ஒப்புரவு ஆக வேண்டும் - உரோ 11:15.
 •   உலக ஞானத்தால் கடவுளை அறிய முடியாது – 1கொரி 1:21.
 •   உலகம், மேன்மை எனக்கருதியதை, கடவுள் குப்பை எனக்கண்டார் - 1கொரி 1:8.
 •   உலகத்தால் ஒருவர் மாசுபடாமல் இருப்பது, கடவுளுடைய பார்வையில் உயர்ந்தது – யாக் 1:27.
 •   உலக ஞானம், கடவுளுக்கு முன் மடமை – 1கொரி 3:19.
 •   உலகை மீட்க, கடவுள் மகனை அனுப்பினார் - யோவா 17:18.
 • C.உலகமும் - இயேசுவும்:
 •   இயேசு உலகின் பாவம் போக்க வந்தார் - யோவா 1:29.
 •   இயேசுவும் அவர் சீடர்களும் உலகை சார்ந்தவர்கள் அல்ல – யோவா 17:14,16.
 •   உலகின் பாவங்களுக்கு, இயேசு பரிகாரி – 1யோவா 2:2.
 •   இயேசு உலகை வென்றுவிட்டார்- யோவா 16:33.
 •   இயேசு, உலகத்துக்கு ஒளி –யோவா 8:12, 9:5, 12:46.
 •   இயேசு உலகின் மீட்பர் - 1யோவா 4:14, 1திமொ 1:15, யோவா 12:47, 3:17, யோவா 6:33,51 , 17:18.
 •   இயேசுவின் அரசு, உலகை சார்ந்தது அல்ல- யோவா 18:36,37.
 • D.உலகமும் - ஆவிக்குரியவர்களும்:
 •   உலகப் போக்கை பின்பற்றாதீர்கள் - 1திமொ 1:9.
 •   இவ்வுலக வாழ்வை, ஒரு பொருட்டாக கருதாதீர் - யோவா 12:25.
 •   உலகத்தின் போக்கின்படி, தீர்ப்பிடாதீர்கள் - யோவா 8:15.
 •   உலகப் போக்கின்படி, ஒழுகாதீர்கள் - உரோ 12:2.
 •   உலகப் போக்கின்படி, வாழாதீர்கள் - எபே 2:2.
 •   உலகப் போக்கிலான விதிமுறைகளுக்கு உட்படாதீர் - கொலோ 2:20.
 •   உலகின் மீதும், அதன் எதன்மீதும், அன்பு செலுத்தாதீர் - 1யோவா 2:15.
 •   உலகை வெல்பவன், கடவுளிடமிருந்து பிறந்தவன் - 1யோவா 5:4.
 •   விசுவாசி, உலகை வெல்வான் - 1பேது 5:5.
 • அலகை
 • அலகையோடுள்ள இயேசுவின் நிலைப்பாடும், உறவும்
 • A. அலகையின் தன்மைகள்:
 •   உலகின் தலைவன் - யோவா 14:30.
 •   இருள் நிறைந்த உலகின் ஆற்றல் - எபே 6:2.
 •   உலகை தன் பிடியில் வைத்திருக்கும் தீயோன் - 1யோவா 5:19.
 •   இயேசுவை ஏற்க மறுப்பவர்களின் தந்தை – யோவா 8:44.
 •   தன்னை கடவுளாக காட்டிக்கொள்பவன் - 2தெச 2:4.
 • B.அலகையின் செயல்கள் :
 •   பொறாமையை தூண்டும் பேய் - 1சாமு 18:8.
 •   எண்ணங்களை சீரழிக்கும் பேய் - 2கொரி 11:3.
 •   அறிவுக்கண்ணை குருடாக்கும் பேய் - 2கொரி 4:4.
 •   பாவ எண்ணங்களை தூண்டும் பேய் - யோவா 13:2.
 •   பாவம் செய்யும் பேய் - 1யோவா 3:8.
 •   பெருமை, கட்சிமனப்பான்மை, குழப்பம், கொடும் செயல் செய்யத் தூண்டும் பேய் - யாக் 3:16.
 • C.அலகையும் இயேசுவும்:
 •   அலகையின் செயல்களை இயேசு ஒழிக்க வந்தார் - 1யோவா 3:8.
 •   இயேசுவை அலகை சோதித்தது – லூக் 4:1-13.
 •   இயேசுவைக் கண்டு அலகை அஞ்சியது – மத் 8:29.
 •   அலகையின் பிடியினின்று, பிணியாளரை இயேசு மீட்டார் – தி.ப 10:38.
 •   அலகையைப் பற்றி, விழிப்பாயிருக்க இயேசு கூறினார் - லூக் 8:12.
 • D.அலகையும் ஆவிக்குரியவர்களும்:
 •   அலகையைப் பற்றி, எச்சரிக்கையாயிருக்க வேண்டும் - 1பேது 5:8.
 •   அலகையை எதிர்த்து நில்லுங்கள் , அவன் ஓடிவிடுவான் - யாக் 4:7.
 •   சீடர்களுக்குள் அலகையிருப்பான் - யோவா 13:2,27.
 •   சீடர்கள், துன்பத்தை ஏற்க விடாமல் தடுப்பான் - மத் 16:22,23.
 •   சீடரை, சோதனையால் புடமிடுவான் - லூக் 22:31.
 •   சீடரை, தம் மாய வலையில் சிக்க வைத்து, தன் விருப்பங்களுக்கு அடிமைப்படுத்துவான் - 2திமொ 2:26.
 • உடல்
 • உடலின் எட்டு தேவைகள் மட்டில், இயேசுவின் நிலைப்பாடும், உறவும்
 • 1. உடல் பசிக்கு உணவு தேடும் - தொ.நூ 25:30-33:
 •   இயேசுவுக்கு“தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் உணவு”– யோவா 4:34.
 •   ஆவிக்குரியவருக்கு“மனிதன் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறார்” - மத் 4:4;
 • 2. உடல் நோயில் மருந்தை தேடும் - சீரா 38:9,12.
 •   இயேசுவுக்கு“நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவன் தேவை” – லூக் 5:31.
 •   ஆவிக்குரியவருக்கு“மருந்தோ பச்சிலையோ அவர்களை குணப்படுத்த வில்லை, அவருடைய வார்த்தையே அவர்களை குணமாக்கியது” – சா.ஞா 16:12, தி.பா 107:20.
 • 3. உடல் களைப்பில் உறக்கம் கேட்கும் - மாற் 14:40.
 •   இயேசுவுக்கு“இயேசு பகலெல்லாம் போதித்தார், இரவெல்லாம் ஜெபித்தார்” - லூக் 21:27.
 •   ஆவிக்குரியவருக்கு“சோதனைக்கு உட்படாதபடி, விழிப்பாயிருந்து ஜெபியுங்கள்” - மத் 26:41.
 • 4. உடல் பருவத்தில் இணையைத் தேடும் - தொ.நூ 24:67, 28:2.:
 •   இயேசுவுக்கு“அருள் பெற்றவருக்கே, மணத்துறவின் மேன்மை புரியும் - மத் 19:11,12 - இயேசு அருள் நிறைந்தவர்” - 2கொரி 13:13.
 •   “திருமணம் செய்யாமலிருப்பதே நல்லது” – 1கொரி 7:28, 32-38.
 • 5. உடல் இணையில் சந்ததியை விரும்பும் - தொ.நூ 15:3
 •   இயேசுவுக்கு“இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் பிறப்பவர்களே, கடவுளின் பிள்ளைகள்” - யோவா 1:12,13.
 •   “ஆபிரகாமுக்கு இக்கற்களிலிருந்தும் பிள்ளைகளை எழுப்ப கடவுள் வல்லவர் ” - மத் 3:9.
 • 6. உடல் தங்குவதற்கு வீட்டைத் தேடும் - 2அர 4:10.
 •   இயேசுவுக்கு“நரிகளுக்கு வளைகள் உண்டு, வானத்துப் பறவைகளுக்கு, தங்க கூடுகள் உண்டு, மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை” – லூக் 9:58.
 •   “என் தந்தை வாழும் இடத்தில், உறைவிடங்கள் பல உள்ளன. நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்” - யோவா 14:2,3 .
 • 7. உடல், நாளைக்கென்று சேமிக்க ஆசிக்கும் - தொ.நூ 41:35.
 •   இயேசுவுக்கு“ஒன்றுமில்லாமல் , அனுப்பிய போது உங்களுக்கு ஏதாவது குறைவுபட்டதா?” - லூக் 22:35
 •   “விண்ணுலகில் செல்வம் சேருங்கள் - மத் 6:19-21.”
 • 8. ஆபத்தில் பாதுகாப்பு - மத் 26:51.
 •   “என் அரசு, இவ்வுலக அரசு போலன்று, இருந்திருந்தால், என் காவலர்கள் போராடியிருப்பார்கள்” - யோவா 18:38.
 •   “இதோ! ஓநாய்களிடையே ஆடுகளைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்” - மத் 10:16.
 • இயேசு உலகம், பிசாசு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்
 •   மேற்கூறிய கருத்துக்களிலிருந்து, உலகம், பிசாசு உடலோடு, இயேசுவுக்குள்ள நிலைப்பாடும், உறவும் என்ன என்பதைக் காண்கிறோம்.
 •   தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு தடையான இம்மூன்றையும், இயேசு, தன்னடக்கம், கட்டுப்பாடோடு மேற்கொண்டார்.
 •   ஆவிக்குரியவர்களும் அவ்வண்ணமே, உலகம், பிசாசு, உடலை மேற்கொண்டு வாழ, தன்னடக்கம், கட்டுப்பாடு எனும் நோன்பை, வாழ்நாள் முழுவதும் கைக்கொள்ள வேண்டும் என்று, மேற்சொன்ன பாடம் நமக்கு அறிவுறுத்துகிறது.
 •   இதை மேற்கோளாக காட்டவே, இயேசுவின் பாலைவன நோன்பு அமைந்திருந்தது.

இயேசுவின் வாழ்வே ஆவிக்குரிய நோன்பு