பழைய ஏற்பாட்டில் நோன்பு :

பழைய ஏற்பாட்டில் நோன்பு

 • 1. பெயர் விளக்கம்:
 •   எபிரேயத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு, “SOM” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. “SUM” என்றால், நோன்பிருப்பது என்று அர்த்தம்.
 •   கிரேக்கத்தில், நோன்பு என்ற வார்த்தைக்கு “Nestis” அல்லது, “Nesteia” என்ற வார்த்தை, பயன்படுத்தப்படுகிறது. “Nesteua” என்றால், “நோன்பிருப்பது” என்று அர்த்தம்.
 • 2. பொருள்:
 •   ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, உண்ணும் உணவையும், குடிக்கும் பானத்தையும் நிறுத்தி வைப்பது, என்று பொருள்.
 • 3. எத்தனை முறை நோன்பு:
 •   தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது "ஒப்புரவு நாளில்", நோன்பிருந்தார்கள் - லேவி 16:30-31, 23:27-32, எண் 29:7,11.
 •   நாடுகடத்தலுக்குப் பின் ஆண்டுக்கு நான்கு முறை, நான்காம், ஐந்தாம், ஏழாம், பத்தாம் மாதங்களில், நோன்பிருந்தார்கள் - செக் 8:19.
 • 4. எத்தனை வகை நோன்பு:
 •   1. தனி நோன்பு – தாவீது – 2சாமு 12:22.
 •   2. கூட்டு நோன்பு - இஸ்ராயேலர் - நீ.த 20:26.
 •   3. நாள் குறிப்பிட்டு நோன்பு – யோவே 1:14.
 • எதற்காக நோன்பு
 • 1. மனத்துயரத்தின் வெளிப்பாடு நோன்பு :
 •   சவுல் மன்னனின் இறப்புக்காக மக்கள் நோன்பிருந்தார்கள் – 1சாமு 31:13, 2சாமு 1:12.
 •   ஆப்னேரின் இறப்புக்காக தாவீது நோன்பிருந்தார் – 2சாமு 3:35.
 •   எருசலேம் தீக்கிரையான போது, நெகேமியா நோன்பிருந்தார் - நெகே 1:4.
 •   பிறரின் நோயில், தாவீது நோன்பிருந்தார் - தி.பா 35:13-14.
 • 2. பாவப் பரிகாரத்துக்காக நோன்பு :
 •   எலியாவின் காலத்தில், ஆகாபு மன்னன், பாவ அறிக்கையிட்டு, நோன்பிருந்தான் - 1அர 21:27.
 •   நெகேமியா மக்களை ஒன்றுகூட்டி, நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - நெகே 9:1-2.
 •   தானியேல் நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டார் - தானி 9:3-4.
 •   நினிவே மக்கள், அரசன் என யாவரும், நோன்பிருந்து, பாவ அறிக்கையிட்டனர் - யோனா 3:5-8.
 • 3. கடவுளுடைய உதவியும், வழிநடத்தலும் பெற நோன்பு:
 •   பத்துக் கட்டளையை பெறுவதற்காக – மோசே நோன்பு இருந்தார் – வி.ப 34:28, இ.ச 9:9.
 •   தன் குழந்தை நலம் பெற, தாவீது நோன்பு இருந்தார் – 2சாமு 12:16-23.
 •   போர் வேளையில், கடவுளின் உதவி பெற, மக்களிடம் நோன்பிருக்குமாறு, யோசேபாத் கட்டளையிட்டார் - 2குறி 20:3-4.
 •   நாடு திரும்புதலின் வேளையில், பயணம் நலமாக அமைய, எஸ்றா நோன்பு நாளைக் குறிப்பிட்டார் - எஸ்றா 8:21-23.
 • 4. பிறருக்காக நோன்பு :
 •   நாடு திரும்பியவர்களின் குற்றங்களுக்காக, எஸ்றாவின் நோன்பு – எஸ்றா 10:6.
 •   மக்களின் மீட்புக்காக – எஸ்தரின் நோன்பு – எஸ் 4:15-17.

பழைய ஏற்பாட்டில் நோன்பு