கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை • கத்தோலிக்க சபைக்கு நன்றி

  குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றுக்கொண்ட, கத்தோலிக்க அன்புறவு, கத்தோலிக்க பக்தி வைராக்கியம், கத்தோலிக்க ஆத்மீகப் பயிற்சிகள், கத்தோலிக்க குடும்ப வாழ்வு, கத்தோலிக்க துறவிகளின் முன்மாதிரி, புனிதர்களின் வழிகாட்டுதல், இவை எல்லாம், ஓர் ஏணியாக இருந்து, அருட்தந்தை R.ஜாண்ஜோசப் அவர்களை, ஒரு புனிதமான ஆவிக்குரிய குருவாக உயர்த்தியது. அதற்காக, அவர் என்றும், கத்தோலிக்க திருச்சபைக்கு நன்றியுள்ளவராயிருக்கிறார்.

  கத்தோலிக்க திருச்சபைக்குள் இல்லாத எதையும், தந்தையவர்கள் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. 1.ஆவிக்குரிய வாழ்வும், 2.இறை விருப்பத்துக்குக் கட்டுப்பட்ட அன்புறவும், 3.ஒரு விசுவாசியை இரத்த சாட்சியாக்கும் பயிற்சிகளும், கத்தோலிக்க சபையில், நிறைந்து காணப்படுகின்றன.

  கத்தோலிக்க சபையால், புனிதர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், மேற்சொன்னவற்றை, தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டு, ஆவிக்குரிய விசுவாசிகளாக வாழ்ந்து, மடிந்து, இன்றும், சமய எல்லைகளைக் கடந்து நின்று, மீட்பின் பணியை, செய்து கொண்டிருக்கிறார்கள்.

  கத்தோலிக்க திருச்சபைக்குள், இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்து, பல ஆயிரம் 'புனிதர்களை உருவாக்கிய ஆவிக்குரிய வாழ்வை', கத்தோலிக்க சபையில் பெற்று வாழ முடியாமல், எங்கெங்கோ அலைந்து திரியும், கத்தோலிக்கர்களுக்கும், மற்றவர்களுக்கும், அதை அளித்து, வழிநடத்தும், தந்தையவர்களின் பணி, CPM சபையில் தொடர்கிறது.

 • கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை

   "மீட்பை" மையமாக வைத்து, உருவான கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன் சபை, இன்று, கத்தோலிக்க கோட்பாடுகளை கைக்கொண்டு, ஓர் ஆவிக்குரிய சபையாக வளர்ந்து வருகிறது.

   CPM சபை, கத்தோலிக்க திருச்சபையின், நிர்வாகத்தின் கீழ் இல்லை. ஆனால்,

  • 1.கத்தோலிக்க விசுவாசம்

  • 2.கத்தோலிக்க வழிபாடுகள்

  • 3.கத்தோலிக்க திருவருட்சாதனங்கள்

  • 4.கத்தோலிக்க திருமறைநூல்

  • 5. கத்தோலிக்க திருமறை விளக்கம்

  • 6.கத்தோலிக்க பாரம்பரியம்

  • ஆகியவற்றை பற்றிக்கொண்டு, அதோடு, விசுவாசிகளுக்கு, "ஆவிக்குரிய அனுபவங்களையும் தந்து, அவர்களை இரட்சிப்பு அபிஷேகப் பாதையில், CPM சபை வழிநடத்துகின்றது.

   மேலும், CPM சபை, கத்தோலிக்கர்களுக்கு, ஆவிக்குரிய அனுபவத்தை தருவதோடு, அவர்களும், ஆவிக்குரிய மக்களாக வாழலாம் எனும், நம்பிக்கையை ஊட்டி, அன்றாட வாழ்வில், ஆவிக்குரிய மக்களாக அவர்கள் வாழ, பயிற்சியும் அளிக்கிறது.