கனி நிறைந்த அன்பு

செய்

 •   நன்மையால் தீமையை வெல்லுங்கள் - உரோ 12:21.
 •   நான் உங்கள் காலடிகளை கழுவியது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யுங்கள் - யோவா 13:14.
 •   நான் உங்களுக்கு அன்பு செலுத்தியது போல, நீங்களும் செய்யுங்கள் - யோவா 13:34.
 •   உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருக்கட்டும் - உரோ 12:9.
 •   பிறர் உங்களை விட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள் - உரோ 12:10, பிலி 2:3.
 •   எப்பொழுதும், எதிர்நோக்கோடும், மகிழ்ச்சியோடுமிருங்கள் - உரோ 12:12.
 •   உயர்வு மனப்பான்மை கொள்ளாமல், தாழ்நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள் - உரோ 12:16.
 •   முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள் - உரோ 12:18.
 •   ஆள்பவருக்கு பணிந்திருங்கள் - உரோ 13:1.
 •   மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள் - உரோ 13:7.
 •   அன்பு செலுத்துவதே உங்கள் கடனாயிருக்கட்டும் - உரோ 13:8.
 •   கிறிஸ்து உங்களை ஏற்றுகொண்டது போல, நீங்களும் பிறரை ஏற்றுக்கொள்ளுங்கள் - உரோ 15:7.
 •   அன்போடு அனைத்தையும் செய்யுங்கள் - 1கொரி 16:14.
 •   முழு தாழ்மை, கனிவு, பொறுமையோடு ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள் - எபே 4:2.
 •   அமைதியுடன் இணைந்து வாழுங்கள் - எபே 4:3.
 •   கிறிஸ்துவுக்கு அஞ்சி, ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள் - எபே 5:21.
 •   ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் உடையவராயிருங்கள் - பிலி 2:2.
 •   மனத்தாழ்மையோடு பிறரை உயர்ந்தவராக எண்ணுங்கள் - பிலி 2:3.
 •   கீழ்படிதலோடு நடயுங்கள் - பிலி 2:12.
 •   கனிந்த உங்கள் உள்ளம், அனைவர் முன்னும் விளங்குவதாக – பிலி 4:5.
 •   பரிவு, கனிவு, பொறுமையை கொண்டிருங்கள் - கொலோ 3:12.
 •   ஒருவருக்கொருவர் பொறுத்து கொள்ளுங்கள் - கொலோ 3:13.
 •   உங்கள் பேச்சு இனியதாகவும், சுவையுடையதாகவும் இருக்கட்டும் - கொலோ 4:6.
 •   அன்பு செய்யவும், நற்செயல்கள் புரியவும் தூண்டியெழுப்புங்கள் - எபி 10:24.
 •   அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள் - எபி 12:14.
 •   மனதாழ்மையுடையோராய் இருங்கள் - 1பேது 3:8.
 •   பணிவோடும், மரியாதையோடும் விடை அளியுங்கள் - 1பேது 3:16.
 •   ஒருவருக்கொருவர் ஆழந்த அன்பு காட்டுங்கள் - 1பேது 1:22, 4:8.
 •   மனதாழ்மையை ஆடையாய் அணியுங்கள் - 1பேது 5:5.
 •   கடவுளுடைய கரத்தின் கீழ் உங்களை தாழ்த்துங்கள் - 1பேது 5:6.
 •   உங்கள் செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்யுங்கள் - 1யோவா 3:18.
செய்

செய்யாதே

 •   உங்களை நீங்களே அறிவாளிகளாக கருதாதீர் - உரோ 12:16.
 •   சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள் - எபே 4:26.
 •   வீண் பெருமை பாராட்டாதீர் - கலா 5:26.
செய்யாதே