துன்பம் கொடுக்காத – அன்பு

செய்

 •    பழிவாங்குதல் எதையும் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள் - உரோ 12:19.
 •   பிரிவனை உண்டாக்குகிறவர் மேல் கவனமாயிருங்கள் - உரோ 16:17.
 •   நன்மை செய்ய ஞானமுடையவராக இருங்கள். தீமை செய்ய கபடற்றவராக இருங்கள் - உரோ 16:19.
 •   எல்லாரும் பிறர் நலமே நாடுங்கள் - 1கொரி 10:24.
 •   பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும் - எபே 4:26.
 •   மனக்கசப்பு, சீற்றம், சினம் ஒழியட்டும் - எபே 4:31.
 •   தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள் - எபே 4:31.
 •   சினம், சீற்றம், தீமையை நீக்குங்கள் - கொலோ 3:8.
 •   சினம்கொள்ள தாமதிக்க வேண்டும் - யாக் 1:19.
 •   தீமையையும், வஞ்சகத்தையும் அகற்றுங்கள் - 1பேது 2:1.
 •   அவதூறு பேசுவதை அகற்றுங்கள் - 1பேது 2:2.
செய்

செய்யாதே

 •   உங்களுக்கு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக தண்டாதீர்கள் - லூக் 3:13.
 •   எவரையும் அச்சுறுத்தி, பணம் பறிக்காதீர்கள் - லூக் 3:14.
 •   யார்மீதும் பொய்குற்றம் சுமத்தாதீர்கள் - லூக் 3:14.
 •   மற்றவர்களை கண்டனம் செய்யாதீர்கள் - லூக் 6:37.
 •   யாருக்கும் எதிலும் கடன் படாதீர் - உரோ 13:8.
 •   கருத்து வேறுபாடுகளை பற்றி வாதாடாதீர் - உரோ 14:1.
 •   ஒருவரை ஆதரித்து கொண்டு, வேறொருவரை எதிர்க்காதீர் - 1கொரி 4:6.
 •   ஒருவருக்கு ஒருவர் எரிச்சல் ஊட்டாதீர் - கலா 5:26.
 •   பொறாமைப்படாதீர் - கலா 5:26.
 •   பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு, உங்கள் வாயில் வராதிருக்கட்டும் - கொலோ 3:8.
செய்யாதே