சகோதர அன்பு

செய்

 •   நன்மையால் தீமையை வெல்லுங்கள் - உரோ 12:21.
 •   நீங்கள் காணிக்கை செலுத்தும் முன், உங்கள் சகோதரரோடு நல்லுறவு ஏற்படுத்தி கொள்ளுங்கள் - மத் 5:24.
 •   சகோதரன் குற்றம் செய்தால், ஏழு எழுபது தடவை மன்னியுங்கள் - மத் 18:22.
 •   தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள் - லூக் 6:36.
 •   உங்கள் சகோதர் குற்றம் செய்தால், அவரை கடிந்து கொள்ளுங்கள் - லூக் 17:3.
 •   உங்கள் சகோதர் மனம் மாறினால், அவரை மன்னியுங்கள் - லூக் 17:3.
 •   நீதியோடு தீர்ப்பளியுங்கள் - யோவா 7:24.
 •   உடன் பிறப்புகளுக்குரிய முறையில் அன்பு காட்டுங்கள் - உரோ 12:10.
 •   விருந்தோம்பலில் கருத்தாயிருங்கள் - உரோ 12:13.
 •   மகிழ்வாரோடு மகிழுங்கள், அழுவாரோடு அழுங்கள் - உரோ 12:15.
 •   நீங்கள் ஒரு மனத்தவராய் இருங்கள் - உரோ 12:16.
 •   சகோதரருக்கு இடையூறாக இருப்பதில்லை என தீர்மானியுங்கள் - உரோ 14:13.
 •   நீங்கள் ஒத்த கருத்துடையவராய் இருங்கள் - 1கொரி 1:10.
 •   எல்லாருக்கும், சிறப்பாக விசுவாசிகளுக்கு நன்மை செய்யுங்கள் - கலா 6:10.
 •   ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் - எபே 4:32.
 •   ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் - எபே 4:32.
 •   சகோதர அன்பில் நிலைத்திருங்கள் - எபி 13:11.
 •   சிறைப்பட்டவரோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பது போல, அவர்களை நினைத்து கொள்ளுங்கள் - எபி 13:3.
 •   சகோதரர் சகோதரர்களிடம் அன்பு செலுத்துங்கள் - 1பேது 2:17.
 •   எல்லோரும் ஒருமனப்பட்டவராயிருங்கள் - 1பேது 3:8.
 •   இரக்கம், சகோதர அன்பு, பரிவுள்ளம் கொண்டிருங்கள் - 1பேது 3:8.
 •   முணுமுணுக்காமல் விருந்தோம்புங்கள் - 1பேது 4:9.
 •   விசுவசிக்க தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள் - யூதா 1:22.
செய்

செய்யாதே

 •   பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காதீர்கள் - மத் 7:1
 •   விருந்தோம்ப மறவாதீர் - எபி 13:2.
 •   துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர் - எபி 13:3.
செய்யாதே