ஆத்மீக வாழ்வும் - இறைதன்மைகளும்

செய்

 •   உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும் - மத் 5:16.
 •   உன் வலக்கை செய்வது, இடக்கைக்கு தெரியாதபடி பார்த்து கொள் - மத் 6:3.
 •   உங்கள் வேலையில் கிடைக்கும் ஊதியமே போதுமென்றிருங்கள் - லூக் 3:14.
 •   இயேசு உங்களுக்கு சொல்வதையெல்லாம் செய்யுங்கள் - யோவா 2:5.
 •   கடவுள் முன் கற்புள்ள கன்னியாக இருங்கள் - 2கொரி 11:12.
 •   உங்கள் செயல்களை ஆய்ந்து பாருங்கள் - கலா 6:4.
 •   இறைவார்த்தையை கற்போர், கற்று கொடுப்போருக்கு தனக்குள்ளதில், பங்கு கொடுங்கள் - கலா 6:6.
 •   நீங்கள் பெற்றுக்கொண்ட, அழைப்புக்கேற்ப வாழுங்கள் - எபே 4:1.
 •   நேர்மையோடு, பாடுபட்டு, உழையுங்கள் - எபே 4:28.
 •   உன் நடத்தையைப் பற்றி கருத்தாயிரு – எபே 5:5.
 •   ஞானமற்றவர்களாய் வாழாமல், ஞானத்தோடு வாழுங்கள் - எபே 5:15.
 •   மனித போதனைகளால் அலைக்கழிக்கப்படாதே – எபே 4:14.
 •   உலக போக்கிலானவற்றை ஒழித்து விடுங்கள் - கொலோ 3:5.
 •   படிப்பினையின் தொடக்க நிலையை தாணடி, முதிர்நிலைக்கு செல் - எபி 6:1.
 •   பொருளாசையை விலக்கிவிடு – எபி 13:5.
 •   நீங்கள் கீழ்படிதலுள்ள மக்களாயிருங்கள் - 1பேது 1:14.
 •   மனச்சான்றை குற்றமற்றதாய் காத்துக்கொள் - 1பேது 3:16.
செய்

செய்யாதே

 •   நீ எதர்க்காகவும் ஆணையிடாதே – மத் 5:34.
 •   தீமை செய்பவரை எதிர்க்காதே – மத் 5:39.
 •   மனிதர் பார்க்க வேண்டுமென்று அறச்செயல் செய்யாதே – மத் 6:1.
 •   மணணுலகில் செல்வத்தை சேமித்து வைக்காதே – மத் 6:19.
 •   உன் உணவு உடை பற்றி கவலைபடாதே – மத் 6:25.
 •   சிறியோரை இழிவாக கருதாதே – மத் 18:10.
 •   எதை உண்பது எதை குடிப்பது என்று கவலைப்படாதே – லூக் 12:29.
 •   இவ்வுலகை சார்ந்தவற்றை எண்ணாதே – கொலோ 3:2.
 •   உலகின் மீது அன்பு செலுத்தாதே – 1யோவா 2:15.
 •   காயீனைப் போல் இராதே – 1யோவா 3:12.
செய்யாதே