ஆத்மீக வாழ்வும் - ஆவியின் கனிகளும்

செய்

 •   பிறர் உனக்கு செய்ய வேண்டுமென்று, நீ விரும்புகின்றவற்றை நீயும் பிறருக்கு செய் - மத் 7:12.
 •   நீ பெரியவராக விரும்பினால், தொண்டராய் இரு – மத் 20:26.
 •   உன் உடமைகளை விற்று தர்மம் செய் - லூக் 12:33.
 •   கடவுளின் அன்பில் நிலைத்திரு – யோவா 15:9, யூதா 1:21.
 •   தீமையை வெறுத்து, நன்மையை பற்றி கொள் - உரோ 12:9.
 •   விசுவாசத்தில் நிலைத்திரு – 1கொரி 16:13.
 •   ஆர்வத்தோடு பிறருக்கு கொடு – 2கொரி 8:12.
 •   உனக்கு மிகுதியாயிருந்தால், குறையாயிருப்போரின் குறையை நீக்கு – 2கொரி 8:14.
 •   விசுவாசத்தையும், பொறுமையையும் உரிமையாக்கி கொண்டவர்களை நீ பின்பற்று – எபி 6:12.
 •   உன் ஞானத்தை நடத்தையால் காட்டு – யாக் 3:13.
 •   நம்பிக்கை, நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், மனஉறுதி, இறைப்பற்று, சகோதர நேயம், அன்பு இவற்றை கொண்டிரு – 2பேது 1:5-7.
 •   எல்லாவகை பேராசையையும் விட்டுவிடு – லூக் 12:15.
 •   எப்பொழுதும் மகிழ்ச்சியாயிரு, இடைவிடாது ஜெபி, எந்த சூழ்நிலையிலும் நன்றி கூறு – 1தெச 5:16-18.
 •   உண்மை, நீதி, விசுவாசம், நற்செய்தி, மீட்பு இவற்றை அணிந்து கொள் - எபே 6:14-17.
 •   அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து, நல்லதை பற்றிகொள் - 1தெச 5:21.
 •   பொய்யை விலக்கி உண்மை பேசு – எபே 4:25.
 •   அருள்வளர்ச்சிக்கு ஏற்ப, நல்ல வார்த்தைகளை பேசு – எபே 4:29.
 •   கெட்ட வார்த்தையை உன் வாயிலிருந்து விலக்கி விடு – எபே 4:29.
செய்

செய்யாதே

 •   நன்மை செய்வதில் மனம் தளராதே – 2தெச 3:13.
 •   உன்னை குறித்து, நீ மட்டுமீறி மதிப்பு கொள்ளாதே – உரோ 12:16.
செய்யாதே