குடும்ப கடமைகள்

செய்

 •   நன்மையால் தீமையை வெல்லுங்கள் - உரோ 12:21.
 •   திருமணமான பெண் ஆண்டவருக்கு பணிந்திருப்பது போல, கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - எபே 5:22.
 •   திருச்சபை கிறிஸ்துவுக்கு பணிந்திருப்பது போல் மனைவி கணவருக்கு பணிந்திருக்கட்டும் - எபே 5:24.
 •   கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல், கணவன் மனைவியை அன்பு செய்யுங்கள் - எபே 5:25.
 •   கணவன் மனைவியை தன் சொந்த உடலென கருதி அன்பு செய்யுங்கள் - எபே 5:28.
 •   தன் மீது அன்பு காட்டுவது போல, கணவன் மனைவி மீது அன்பு காட்டுங்கள் - எபே 5:33.
 •   பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் - எபே 6:11.
 •   பெற்றோரே, உங்கள் பிள்ளைகளை கண்டித்து, திருத்தி, ஆண்டவருக்கு ஏற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்துங்கள் - எபே 6:4.
 •   பிள்ளைகள் மனந்தளர்ந்து போகாதபடி பெற்றோர் பார்த்து கொள்ளுங்கள் - கொலோ 3:20.
 •   பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் - கொலோ 3:20.
 •   திருமணமான பெண்கள் கணவருக்கு பணிந்திருங்கள் - கொலோ 3:18, 1பேது 3:1.
 •   திருமணமான ஆண்கள் மனைவியோடு இணைந்து வாழுங்கள் - 1பேது 3:7.
 •   கணவர் தம் மனைவிக்கு மதிப்பு கொடுங்கள் - 1பேது 3:7.
 •   இளைஞர்களே, முதியவர்களுக்கு பணிந்திருங்கள் - 1பேது 5:5.
 •   திருமணமான ஆண்கள் மனைவியிடம் அன்பு செலுத்துங்கள் - கொலோ 3:19
செய்

செய்யாதே

 •   கணவன் மனைவியை கைவிடலாகாது – 1கொரி 7:11
 •   தந்தையர் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர் - எபே 6:4.
செய்யாதே