பிறர் நலம் பேணுதல்

செய்

 •   ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருங்கள் - உரோ 14:13.
 •   வலுவற்றவரை தாங்குங்கள் - உரோ 15:1.
 •   அடுத்தவருடைய வளர்ச்சிக்காக செயல்பட்டு, அவர்களுக்கு உகந்தவர்களாக இருங்கள் - உரோ 15:2.
 •   ஒருவர் மற்றவருடைய சுமையை தாங்குங்கள் - கலா 6:2.
 •   தன்னலத்தை நாடாது, பிறர் நலத்தை நாடுங்கள் - பிலி 2:4.
 •   நன்றியுள்ளவர்களாயிருங்கள் - கொலோ 3:15.
 •   ஒருவரை ஒருவர் தேற்றுங்கள் - 1தெச 4:18.
 •   ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி வளர்ச்சியடைய செய்யுங்கள் - 1தெச 5:11.
 •   சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள் - 1தெச 5:14.
 •    மனதளர்ச்சியற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள் - 1தெச 5:14.
 •   வலுவற்றோர்க்கு உதவுங்கள் - 1தெச 5:14.
 •   எல்லாரோடும் பொறுமையாயிருங்கள் - 1தெச 5:14.
 •   எல்லாருக்கும் நன்மை செய்யுங்கள் - 1தெச 5:15.
 •   ஒருவருக்கொருவர் ஊக்க மூட்டுங்கள் - எபி 10:25.
 •   நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் - உரோ 14:1.
 •   பிற இனத்தார் நடுவில் நன்னடத்தை உடையவராயிருங்கள் - 1பேது 2:12.
 •   நன்மை செய்து பகைவரை வெல்லுங்கள் - 1பேது 2:15.
செய்

செய்யாதே

 •   உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதே – மத் 5:42.
 •   நமக்கு உகந்ததையே தேடாதீர் - உரோ 15:11.
 •   தீமை உங்களை வெல்ல விடாதீர் - உரோ 12:21.
 •   நீங்கள் யாருக்கும் இடைஞ்சலாய் இராதீர் - 1கொரி 10:32.
 •   தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் - 1பேது 3:9.
 •   பழி சொல்லுக்கு பழி சொல் கூறாதீர்கள் - 1பேது 3:9.
செய்யாதே