பெப்ரவரி 18 - நோன்பு ஆரம்பம்


       நோன்பு என்பது, ஆவிக்குரியவர்கள், தங்கள் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய, ஆத்மீக பயிற்ச்சி.

       தன்னடக்கம், மன அடக்கம், புலனடக்கம், கண்ணடக்கம், கட்டுப்பாடு என்று, இதற்கு பொருள் கொள்ளலாம்.

       ஒருவர் தன்னை, கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தன்னை கிறிஸ்துவோடு இணைக்கும், அனைத்துக்கும், கட்டுப்படுவதே ஆவிக்குரிய நோன்பு.

       இந்த நோன்பை, CPM திருச்சபை, விசுவாசிகள், நாற்பது நாட்கள் கடைபிடித்து, தங்கள் ஆத்மீகத்தை புதிப்பித்துக் கொள்கின்றனர்.

       இந்த நோன்பானது, இயேசு அபிஷேகம் பெற்ற பிறகு, பாலைவனத்தில் கடைபிடித்த, நாற்பது நாள் நோன்புக்கு அடையாளம்.

நோன்பிருக்க வாருங்கள்

Sing and Worship

நோன்பிருக்க வாருங்கள் - இயேசுவோடு 
பாலைவனம் செல்ல வாருங்கள் 
உபவாசமே தவக்கோலமே தன்னடக்கம் கட்டப்பாட்டை ஏற்க வாருங்கள்
அபிஷேகம் பெற்றவர்கள் நோன்பிருக்கணும் பாலைவன சோதனையை ஏற்று வாழணும் ஆவியில் பெலனடைய பாடு ஏற்கணும் அன்றாடம் பெந்தக்கோஸ்து நாளைக் காணணும்
மணவாளன் இயேசுவைப் பிரியும் நேரத்தில் மணவாட்டி சபை சேர்ந்து நோன்பிருக்கணும் பிரிய வைக்கும் சக்தியோடு போராடணும் உறவை பெலப்படுத்த நோன்பிருக்கணும்
உலகம், பிசாசு மாமிசத்தின் இச்சைகள் இயேசுவைப் பிரிக்கும் சக்தி என்றுணரணும் தன்னடக்கப் பயிற்சியை என்றும் செய்யணும் இலக்கை நோக்கி நோன்பிருந்து ஓடி ஜெயிக்கணும்
  

உலக ஆசை மேற்கொள்ளாமல் கட்டுப்படுத்தணும் 
பாவ இச்சை ஆண்டிடாமல் விழித்திருக்கணும் 
மாமிசத்தின் தேவைகளை கட்டுப்படுத்தணும் 
கட்டுப்பாடே நோன்பு என்று ஏற்று வாழணும்மனிதா நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்கே திரும்புவாய்